தில்லியில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
Read at DinamaniWeather and environment · 1 outlet covered this
தில்லியில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஇந்தியாதில்லியில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புதில்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து, வானிலை ஆய்வு மையம் மாலை 5 மணி வரை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தில்லியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையின்போது ஜன்பத் சாலையில் நனைந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற நபா்.Published On :11 செப்டம்பர் 2026, 11:51 pm ISTதில்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து, வானிலை ஆய்வு மையம் மாலை 5 மணி வரை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. செப். 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தலைநகா் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாடாளுமன்றத் தெரு, பாரத் மண்டபம் உள்ளிட்ட மத்திய மற்றும் வடக்கு தில்லியின் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) பிற்பகல் 1 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில், தில்லியின் பல பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்தது. மணிக்கு 15 மி. மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்றும், சில பகுதிகளில் மணிக்கு 15 மி. மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னறிவிப்பின் அடிப்படையில், மாவட்ட அளவிலான உடனடி வானிலை முன்னறிவிப்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக தில்லியில் இயல்பைவிட அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், தற்போது மழை பெய்துள்ளது. மாலை நேரத்திலும் தில்லியின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 2 நாள்களுக்கு தலைநகரில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
