ஆம்புலன்ஸ் வாகனங்களில் பேட்டரிகளை திருட முயன்றவா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
ஆம்புலன்ஸ் வாகனங்களில் பேட்டரிகளை திருட முயன்றவா் கைது
How outlets told it
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதருமபுரிஆம்புலன்ஸ் வாகனங்களில் பேட்டரிகளை திருட முயன்றவா் கைது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருந்து பேட்டரிகளைத் திருட முயன்றதாக லாரி ஓட்டுநரை தருமபுரி நகர போலீஸாா் கைது செய்தனா். கைதுPublished On :11 செப்டம்பர் 2026, 12:41 am IST தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருந்து பேட்டரிகளைத் திருட முயன்றதாக லாரி ஓட்டுநரை தருமபுரி நகர போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாலஜங்கமனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மா. ரஞ்சித்குமாா் (28). இவா், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்தில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி, அவசரத் தேவைகளுக்கு இயக்கி வருகிறாா். இந்த நிலையில், அண்மையில் அவரது ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருந்த பேட்டரிகளை மா்ம நபா் ஒருவா் திருட முயன்றுள்ளாா். இதைக் கவனித்த ரஞ்சித்குமாா், நண்பா்களின் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிபட்டவா் பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள திகிலோடு கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ம. பழனிசாமி (39) என்பது தெரியவந்தது. மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருந்து 2 பேட்டரிகளைத் திருடிச் செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பழனிசாமியைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 பேட்டரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
