Sports · 1 outlet covered this

அறிமுக டெஸ்ட்டில் டி20 ஆடிய பாகிஸ்தான் வீரர்..! இங்கிலாந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் ரஸாவுல்லா!

How outlets told it

Dinamani652d ago

அறிமுக டெஸ்ட்டில் டி20 ஆடிய பாகிஸ்தான் வீரர்..! இங்கிலாந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் ரஸாவுல்லா!

Read at Dinamani
அறிமுக டெஸ்ட்டில் டி20 ஆடிய பாகிஸ்தான் வீரர்..! இங்கிலாந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் ரஸாவுல்லா!
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புகிரிக்கெட்அறிமுக டெஸ்ட் போட்டியில் அசத்திய பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் ரஸாவுல்லா மஷ்வானி குறித்து... ஆட்டமிழந்து வெளியேறிய ரஸாவுல்லா - படம்: ஏபிPublished On :12 செப்டம்பர் 2026, 12:07 pm ISTடெஸ்ட்டில் அறிமுக போட்டியில் அசத்திய பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் ரஸாவுல்லா மஷ்வானிக்கு (21 வயது) இங்கிலாந்து ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினார்கள். எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் பரபரப்பாக முடிந்தது. இரண்டாம் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி 449 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து 453 ரன்கள் குவித்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபாலோ ஆன் ஆனதால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 318க்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு களமிறங்கிய ரஸாவுல்லா அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவர் 4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் பேட்டிங்கிலும் மிரட்டியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது பேட்டிங்கிற்கு இங்கிலாந்து ரசிகர்களே எழுந்து நின்று கைதட்டியது சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏற்கெனவே தொடரை 2-0 என இங்கிலாந்து வென்றுள்ளது. பாகிஸ்தான் பந்துவீச்சிலும் கம்பேக் அளிக்கும் என இந்தப் போட்டி சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.SummaryRazaullah Mashwani a Pakistan Debutant Receives Standing Ovation From English Crowd After 81-Run Knockபின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்