13 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோல்வியே சந்திக்காத ஜெர்மனி ஜெயண்ட்ஸ்!
Read at DinamaniSports · 1 outlet covered this
13 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோல்வியே சந்திக்காத ஜெர்மனி ஜெயண்ட்ஸ்!
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புசெய்திகள்ஜெர்மனி ஜெயண்ட்ஸ் என்று அழைக்கப்படும் பயர்ன் மியூனிக் அணியின் ஆதிக்கம் குறித்து... வெற்றிக் களிப்பில் பயர்ன் மியூனிக் அணியினர் - படம்: எக்ஸ் / பயர்ன் மியூனிக் Published On :11 செப்டம்பர் 2026, 4:39 pm ISTஜெர்மனி ஜெயண்ட்ஸ் என்று அழைக்கப்படும் பயர்ன் மியூனிக் கிளப் தனது சொந்த மண்ணில் 13 ஆண்டுகளாகத் தோல்வியே சந்திக்காமல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. சாம்பியன்ஸ் லீக்கில் போடோ/க்ளிமிட் அணியை 5-0 என வீழ்த்தியது. இதில் ஜமால் முசியாலா 47ஆவது நிமிஷத்திலும் ஹாரி கேன் 61ஆவது நிமிஷத்திலும் அல்போன்ஸோ டேவிஸ் 77ஆவது நிமிஷத்திலு கோல் அடித்தார்கள். நட்சத்திர வீரர் மைக்கேல் ஒலிஸே 83, 90+2ஆவது நிமிஷத்தில் 2 கோல்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியுடன் தனது சொந்த மண்ணில் 39 வெற்றிகள் பெற்று, தோல்வியே பெறாமல் ஆதிக்கம் செலுத்திவருகிறது. சுமார் 13 ஆண்டுகளாக இந்த சாதனையை தொடர்ந்து வருகிறது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பயர்ன் மியூனிக், “தோல்வியே சந்திக்காமல் 39 போட்டிகள்... 2013 டிசம்பர் முதல், சொந்த மண்ணில் லீக் அல்லது குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் நாம் இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்தப் பதிவில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் எந்தெந்த அணிகளுடன் எவ்வளவு கோல்கள் வித்தியாசத்தில் வென்றது என்ற புள்ளி விவரங்களையும் இணைத்து வெளியிட்டுள்ளது. கடந்த சீசனில் புன்டெஸ்லீகா உள்பட 3 கோப்பைகளை வென்றது. சாம்பியன்ஸ் லீக்கில் அரையிறுதியில் தோல்வியுற்றது. பேலந்தோர் விருதுக்கான போட்டியாளர்களில் நால்வர் இந்த அணியிலிருந்து தேர்வாகியுள்ளார்கள். SummaryGerman giants FC Bayern Munich unbeaten on home soil for 13 years!பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
