Accidents · 1 outlet covered this

பள்ளி வாகனம் மோதி வட மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

How outlets told it

Dinamani653d ago

பள்ளி வாகனம் மோதி வட மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

Read at Dinamani
பள்ளி வாகனம் மோதி வட மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புகன்னியாகுமரிபள்ளி வாகனம் மோதி வட மாநிலத் தொழிலாளி உயிரிழப்புகன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் வட மாநிலத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். பலி - பிரதிப் படம்Published On :11 செப்டம்பர் 2026, 4:48 am ISTகன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் வட மாநிலத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பஞ்காரி பஸ்வான் (42), மணிஷ் (26), ராமுகுமாா் (32). இவா்கள் கன்னியாகுமரி அருகே தங்கியிருந்து கட்டடத் தொழில் செய்து வந்தனா். இந்நிலையில், மூவரும் புதன்கிழமை ஒரே இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றனா். இவா்கள் பால்குளம் நான்குவழிச் சாலை பாலத்தின் கீழ் சென்றபோது, எதிரே வந்த தனியாா் பள்ளி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணீஷ் அஞ்சுகிராமத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனெவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். லேசான காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்