Politics · 1 outlet covered this

TVK Alliance | 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'... பெயருக்கு வைப்பதற்குப் பின்னால் நடந்த ஒரு சம்பவம்!

How outlets told it

News18 Tamil654d ago

TVK Alliance | 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'... பெயருக்கு வைப்பதற்குப் பின்னால் நடந்த ஒரு சம்பவம்!

Read at News18 Tamil
TVK Alliance | 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'... பெயருக்கு வைப்பதற்குப் பின்னால் நடந்த ஒரு சம்பவம்!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Sep 10, 2026 12:40 PM ISTTVK Alliance | த. வெ. க. கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பெயருக்குப் பின்னால் நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.1/7கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களம் கண்ட த. வெ. க., 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், வி. சி. க., இடதுசாரிகள், ஐ. யு. எம். எல். ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த. வெ. க. ஆட்சியமைத்தது. த. வெ. க. தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்துவதற்காக கடந்த ஜூலை 1ஆம் தேதி தோழமைக் கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.2/7இதன் தொடர்ச்சியாக சென்னை பனையூரில் உள்ள த. வெ. க. தலைமை அலுவலகத்தில் 2ஆவது ஆலோசனைக் கூட்டம் நேற்று, முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், வி. சி. க. தலைவர் திருமாவளவன், ம. தி. மு. க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.3/7வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இடைத்தேர்தல், கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம் உள்ளிட்டவை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் விஜய் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.4/7இந்தக் கூட்டத்தில் த. வெ. க. தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர் வைக்கப்பட்டது. கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள், மதச்சார்பின்மையும், சமூக நீதியும் இந்தக் கூட்டணியின் முதன்மையான கோட்பாடுகள் என்று தெரிவித்தனர்.5/7இதற்கிடையே, 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்கிற பெயர் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இந்தக் கூட்டணி அமைந்த சில நாட்களிலேயே கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்பது முக்கிய கேள்வியாக இருந்தது. அப்போது த. வெ. க. ஆதரவுடன் ராஜ்ய சபா எம். பி. ஆகிய பிரவீன் சக்கரவர்த்தி அப்போதே "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி" என்று பெயர் வைத்தார்.6/7ஆனால் அவர் வைத்த இந்தப் பெயர் இப்போது வைக்கப்படவில்லை. ஏன், அப்போதே இது அதிகாரப்பூர்வமான பெயர் இல்லை எனச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' இப்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது. த. வெ. க. கூட்டணிக்கு முதலில் 'சமூகநீதி வெற்றிக்கூட்டணி' என்ற பெயரே முன்மொழியப்பட்டதாம். அதில் மாற்றம் செய்ய திருமாவளவன் வலியுறுத்தியதாகவும் வி. சி. க. முன்னாள் எம். எல். ஏ. சிந்தனை செல்வன் கூறியிருக்கிறார்.7/7இதுதொடர்பாக சிந்தனை செல்வன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "'சமூகநீதி வெற்றிக்கூட்டணி' என்று முன்மொழியப்பட்ட பெயர், தலைவர் எழுச்சித் தமிழரின் அறிவார்ந்த ஆளுமையால் 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி' எனத் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற தமிழ்தேசியம்... சமூக நீதிக்கான தமிழ் தேசியம் என தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுப் பிரகடனத்தில் திருமாவளவன் பதிவு செய்ததை நினைவு கூறுகிறேன். மதச்சார்பின்மைக்கு எதிரான மதவாத சாதியவாத சக்திகளே தமிழ் சமூகத்தின் முதன்மை எதிரிகள் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் நம் தலைவர். விடுதலைச் சிறுத்தைகளின் உத்தி மாறலாம். இலக்கு ஒருபோதும் மாறுவதில்லை." என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.