1 outlet covered this

திருச்சி கோவில்களில் செல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து

How outlets told it

Daily Thanthi992d ago

திருச்சி கோவில்களில் செல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து

Read at Daily Thanthi
திருச்சி கோவில்களில் செல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 4:29 amதிருச்சி, தமிழகம் முழுவதுமுள்ள 52 கோவில்களில், பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. திருச்சியை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களில் செல்போன் பாதுகாப்பு வசதியும் செய்யப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. ஒரு சில கோவில்களில் டோக்கன் கொடுக்கும் இடத்தில், சில்லரை தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்தநிலையில் திருச்சியில் உள்ள 5 பிரதான கோவில்களிலும், செல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், பாதுகாப்பு அறை லாக்கரில் செல்போன்களை வைத்து, டோக்கன் மட்டும் பெற்றுச்செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.