Religion and culture · 1 outlet covered this

ராமநாதபுரத்தில் பஸ்கள் செல்ல தடை.? - குருபூஜையை முன்னிட்டு வெளியான அதிரடி உத்தரவு

How outlets told it

News18 Tamil653d ago

ராமநாதபுரத்தில் பஸ்கள் செல்ல தடை.? - குருபூஜையை முன்னிட்டு வெளியான அதிரடி உத்தரவு

Read at News18 Tamil
ராமநாதபுரத்தில் பஸ்கள் செல்ல தடை.? - குருபூஜையை முன்னிட்டு வெளியான அதிரடி உத்தரவு
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeராமநாதபுரத்தில் பஸ்கள் செல்ல தடை.? - குருபூஜையை முன்னிட்டு வெளியான அதிரடி உத்தரவுReported by:Manojkumar BPublished by:pradeepa mLast Updated:Sep 10, 2026 5:15 PM ISTஇமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பரமக்குடியில் நடைபெறும் குருபூஜை விழாவிற்கு வரும் வாகனங்களுக்கான மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.1/5ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு மண்டபத்தில் நாளை செப்டம்பர் 11-ம் தேதி நினைவு தினம் மற்றும் குருபூஜை விழா அனுசரிக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவது வழக்கமாகும்.2/5இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இரண்டு நாட்கள் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மரியாதை செலுத்த வருபவர்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் மற்ற காவல்துறையினர் சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.3/5அதன்படி, ராமேஸ்வரம், ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ராமநாதபுரம் பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு, தேவிபட்டினம், ஆர். எஸ். மங்கலம், சி. கே. மங்கலம், சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை செல்ல வேண்டும்.4/5மதுரையில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் நோக்கி வரும் வாகனங்களும் இந்த வழியே அனுமதிக்கப்படும் பயன்படுத்த வேண்டும். மானாமதுரை மற்றும் பரமக்குடி வழியாக செல்ல அனுமதி கிடையாது.5/5திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், கமுதி, முதுகுளத்துாரில் இருந்து ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் வரும் வாகனங்கள் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை, சிக்கல், கீழக்கரை வழியாக ராமநாதபுரம் அல்லது ராமேஸ்வரம் செல்ல வேண்டும். பரமக்குடிக்கு செல்ல அனுமதி இல்லை. குருபூஜை நிறைவுபெற்ற மறுநாள் முதல் வழக்கமான பரமக்குடி, மானாமதுரை பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.