லண்டனில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயம்: இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
Read at Polimer NewsCinema and entertainment · 1 outlet covered this
லண்டனில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயம்: இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
How outlets told it

நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயப் போட்டியை, முதலமைச்சர் விஜய் இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார். லண்டனில் உள்ள சில்வர் ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தை நேரில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய், போட்டியையும் கண்டுகளிக்க உள்ளார். கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்க உள்ள நிலையில், அவரை நேரில் காணவும், போட்டியை ரசிக்கவும் ரசிகர்கள் மற்றும் கார் பந்தய ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. செப். 15-ல் லண்டன் வாழ் தமிழர்களை சந்திக்கிறார் விஜய்இதனிடையே, செப்டம்பர் 15-ஆம் தேதி லண்டனில் வசிக்கும் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், முதலமைச்சர் விஜய் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. லண்டன் வாழ் தமிழர்களுடனான இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தய நிகழ்வும், லண்டன் வாழ் தமிழர்களுடனான சந்திப்பும் முக்கிய நிகழ்வுகளாக அமைய உள்ளன.
