விநாயகர் சதுர்த்திக்கு சென்று திரும்ப மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்
Read at Daily ThanthiReligion and culture · 1 outlet covered this
விநாயகர் சதுர்த்திக்கு சென்று திரும்ப மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்
How outlets told it

சென்னை, விநாயகர் சதுர்த்திக்கு சென்று திரும்ப மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. தெற்கு ரெயில்வேஇது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- விநாயகர் சதுர்த்திக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மானாமதுரையில் இருந்து வரும் 14-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அன்று இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.12 பெட்டிகளை கொண்ட இந்த மெமு ரெயில், திருபுவனம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
