வினா - விடை வங்கி... தமிழ்நாட்டில் கலை மற்றும் கட்டடக் கலை!
Read at DinamaniEducation and jobs · 1 outlet covered this
வினா - விடை வங்கி... தமிழ்நாட்டில் கலை மற்றும் கட்டடக் கலை!
How outlets told it

1. குடைவரைக் கோவில் அமைப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்த பல்லவ மன்னன் யார்?மகேந்திரவர்மன்2. மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட முதல் குடைவரைக் கோவில் எது?மண்டகப்பட்டு கோவில், விழுப்புரம்3. மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவிலைக் கட்டியவர் யார்?இரண்டாம் நரசிம்மவர்மன்4. தென்னிந்தியாவின் மிகவும் பழமையான கட்டுமானக் கோவில் எது?கடற்கரைக் கோவில், மகாபலிபுரம்5. ராஜசிம்ஹா என அழைக்கப்படும் பல்லவ அரசன் யார்?இரண்டாம் நரசிம்மவர்மன்6. காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்ஹா)7. காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவிலைக் கட்டியவர் யார்?இரண்டாம் நந்திவர்மன்8. பஞ்சபாண்டவர் ரதங்கள் எவை?1. திரௌபதி ரதம்2. தர்மராஜ ரதம்3. பீம ரதம்4. அர்ஜூனா ரதம்5. நகுலசகாதேவ ரதம்9. அர்ஜூனாவின் தவம் நினைவுச் சின்னத்தின் நீளம் மற்றும் உயரம் என்ன?100 அடி நீளம் & 45 அடி உயரம்10. மகாபலிபுர நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?198411. எந்த பாண்டியர்கள் பல்லவர்களின் சமகாலத்தவர்கள்?முற்கால பாண்டியர்கள்12. பாண்டியர்களின் குகைக் கோவில்கள் காணப்பட்ட இடங்கள்?மலையடிக் குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி13. பாண்டியர்களின் குடைவரைக் கோவிலுக்கு எடுத்துக்காட்டு?கழுகுமலை வெட்டுவான் கோவில்14. பாண்டியர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டு?1. மீனாட்சியம்மன் கோவில், மதுரை2. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி15. முற்கால பாண்டியர்களின் ஓவியக் கலைக்கு எடுத்துக்காட்டு?சித்தன்னவாசல், புதுக்கோட்டைதிருமலைபுரம், திருநெல்வேலி16. முற்கால சோழர்களின் கட்டக்கலை முறைக்கு பெயர்?செம்பியன் மகாதேவி ஸ்டைல்17. தஞ்சை பெரிய கோவில் விமானத்தின் உயரம் என்ன?216 அடி (66 மீட்டர்கள்)18. தக்ஷிண மேரு என அழைக்கப்படும் கோவில் எது?தஞ்சை பெரிய கோவில்19. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியின் நீளம் மற்றும் உயரம் என்ன?16 அடி நீளம் & 13 அடி உயரம்20. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் உயரம் என்ன?180 அடி (55 மீட்டர்கள்)21. முற்கால சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள்?1. தாதபுரம் கோவில், திண்டிவனம்2. திருப்புறம்பியம் கோவில், கும்பகோணம்22. தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலைக் கட்டியவர் யார்?இரண்டாம் ராஜராஜ சோழன்23. காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோவிலைக் கட்டியது யார்?பிற்கால பாண்டியர்கள்24. விஜயநகர காலத்துக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டு?1. வரதராஜபெருமாள் கோவில், காஞ்சிபுரம்2. ஜலகண்டேஸ்வரர் கோவில், வேலூர்3. அழகியநம்பி கோவில், திருநெல்வேலி4. கோபாலாகிருஷ்ணா கோவில், ஸ்ரீரங்கம்5. ஆதிநாதா கோவில், திருநெல்வேலி6. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி25. விஜயநகர கால மண்டபங்களுக்கு எடுத்துக்காட்டு?1. ஆயிரம் கால் மண்டபம், புதுமண்டபம் - மதுரை2. ரதி மண்டபம் - திருநெல்வேலி3. வானமாமலை கோவில் - திருநெல்வேலி
