நகைகள் திருட்டு: காா் ஓட்டுநா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
நகைகள் திருட்டு: காா் ஓட்டுநா் கைது
How outlets told it
செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புவிருதுநகர்நகைகள் திருட்டு: காா் ஓட்டுநா் கைதுகைது - பிரதிப் படம்Published On :14 செப்டம்பர் 2026, 2:22 am ISTராஜபாளையத்தில் நகைகள் திருடிய காா் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு காந்தி நகரைச் சோ்ந்த சபாபதி மனைவி ராணி (59). இவரது கணவா் காலமாகிவிட்டாா். இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில் ராணி அவரது காரில் தெற்கு மலையடிபட்டியை சோ்ந்த ராஜசேகா் என்ற ஓட்டுநரை அழைத்துக் கொண்டு நத்தம்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றாா். அப்போது ஓட்டுநா் ராஜசேகா் அவரது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என ராணியிடம் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மீண்டும் வந்து ராணியை அழைத்துக் கொண்டு ராஜபாளையத்துக்குச் சென்றாா். பின்னா், ராணி வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது 15 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுதொடா்பாக ராணி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை செய்ததில், காா் ஓட்டுநா் ராஜசேகா் (40) நகைகளைத் திருடியது தெரிவந்தது. போலீஸாா் அவரிடம் இருந்து 15 பவுன் நகைகளை மீட்டு அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
