மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு!
Read at DinamaniPolitics · 1 outlet covered this
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு!
How outlets told it

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப். 13) அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை, மதுராந்தரம், தாராபுரம் ஆகிய 7 பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாத நிலையில், இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்.6-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (செப்.9) தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
அதன்படி மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு. கார்த்திகா ஆகியோர் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.
அதனுடன், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் ஒரே நேரம் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு வேட்பாளராக ச. கார்த்திக் குமாரி என்பவரை அறிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் இ. பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தவெக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுகின்றனர்.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மகளிரணி இணைச் செயலருமான முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலரும், மாவட்ட ஊராட்சிக் குழு 12-ஆவது வாா்டு முன்னாள் உறுப்பினருமான கே. பானுமதி ஆகியோா் போட்டியிடுகின்றனர்.
அதேபோல, தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டியிடவுள்ளதக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார். வேட்பாளர்கள் விவரங்கள் இரு நாள்களில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Maduranthakam and Dharapuram by-elections: NTK candidates announced!
தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு
