மனைவி தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த சைக்கோ..! திருமணமான 6 மாதத்தில் திகில்..! யார் அந்த சுகர் டாடி?
Read at Polimer News1 outlet covered this
மனைவி தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த சைக்கோ..! திருமணமான 6 மாதத்தில் திகில்..! யார் அந்த சுகர் டாடி?
How outlets told it

அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து தூர்நாற்றம்..! கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து தூர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குடியிருப்பில், திருமணமான இளம் தம்பதியினர் வசித்து வந்ததாகவும், இரண்டு நாளாக அவர்களை போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப்பில் இருப்பதாகவும் அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஃபிரிட்ஜை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி..! தகவல் அறிந்த போலீசார், அந்த வீட்டிற்குள் சென்றபோது வீடு முழுவதும் ரத்த கறைகளாக இருந்துள்ளது. இளம்பெண் தலையில்லாமல் சடலமாக தரையில் கிடந்துள்ளார். மேலும், கை, கால்கள் துண்டிக்கப்பட்டு கிடந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். தலை எங்கே? என போலீசார் வீடு முழுவதும் தேட ஆரம்பித்தனர். அப்போது, ஃபிரிட்ஜை திறந்து பார்த்தபோது, பாலிதீன் கவரில் பெண்ணின் தலை இருந்தது போலீசாரை திடுக்கிடவைத்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் "டாவ்" எனப்படும் வெட்டுக் கருவி மற்றும் அறையில் கிடந்த காலியான மதுபாட்டில்கள் உள்ளிட்ட தடயங்களை போலீசார் கைப்பற்றினர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இறந்தவர் யார்? முதற்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தது நூன்மதி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ரியா கோஸ்வாமி என்பது தெரியவந்தது. ஃபேன்சி பஜாரில் உள்ள ஏசி மார்க்கெட் பகுதியில் ஒரு பொட்டிக்கில் ரியா வேலை செய்து வந்துள்ளார். ரியாவின் பெற்றோர் இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததால், அவர் சகோதரரோடு வளர்ந்து வந்துள்ளார். 'Uber' கேப் டிரைவராக வேலை பார்த்து வந்த 30 வயதான ராமானுஜ் என்பவரை ரியா பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டு, அபார்ட்மெண்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். நடந்தது என்ன? ராமானுஜ் தலைமறைவானதால் போலீசார் அவரை தேட ஆரம்பித்தனர். பின்னர், ராமானுஜ் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட ரியாவிற்கு வேறொரு நபரோடு தொடர்பு இருந்ததால் ராமானுஜ் ரியாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கிய இந்த சண்டை மறுநாள் அதிகாலை வரை நீடித்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த ராமானுஜ், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்து, தலையை துண்டித்து பாலிதீன் கவரில் கட்டி ஃபிரிட்ஜில் வைத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர், வீட்டை பூட்டிவிட்டு ராமானுஜ் தலைமறைவாகியுள்ளார். "சுகர் டாடியையும் கொன்று விடுவேன்" கடந்த செவ்வாய்கிழமையன்று, குவஹாத்தியில் உள்ள நீதிமன்றத்திற்கு ராமானுஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது, அஸ்ஸாமி மொழியில் செய்தியாளர்களிடம் பேசிய ராமானுஜ், தனது மனைவியைக் கொன்றுவிட்டதாகவும், சிறையிலிருந்து விடுதலையான பிறகு அந்த 'சுகர் டாடி'யை நிச்சயம் கொன்றுவிடுவேன் என்றும் கூறியுள்ளார். யார் அந்த சுகர் டாடி, அவரை அடையாளம் காட்டுமாறு பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஆத்திரமடைந்த ராமானுஜ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும், யார் அந்த சுகர் டாடி? என்பது குறித்தும் போலீசார் ராமானுஜிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். -தயாநிதி
