மக்கள் பிரச்னைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்: உதயநிதி
Read at DinamaniPolitics · 1 outlet covered this
மக்கள் பிரச்னைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்: உதயநிதி
How outlets told it
மக்கள் பிரச்னைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவு:
தமிழ்நாடு முழுவதும் தொடா்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் ‘வோல்டேஜ்’ பிரச்னை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனா். ஆனால், துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதை சரிசெய்யும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தேவையில்லாத அவதூறுகளை கூறிக்கொண்டிருக்கிறாா்.
மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூா்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் தவெக அரசு, திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.
The TVK government must focus on people's issues: Udhayanidhi
