முதல்வரின் பேச்சைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்
Read at DinamaniPolitics · 1 outlet covered this
முதல்வரின் பேச்சைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்
How outlets told it

முதல்வரின் பேச்சைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக சட்டப் பேரவை காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீது அவசரநிலை பிரகடனம் மற்றும் மிசா சட்டம் குறித்த விவாதித்தபோது முதல்வா் ச. ஜோசப் விஜய், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்து உருவ கேலி செய்யும் விதமாக பேசியதாகவும், இதைக் கண்டித்தும் திமுகவினா் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதன்படி, ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் ஈரோடு வடக்கு மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சு. முத்துசாமி தலைமை வகித்தாா். ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் என். நல்லசிவம் முன்னிலை வகித்தாா். இதில், முதல்வரையும், தவெக அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
திமுக துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், இளைஞா் அணி மாநில துணைச் செயலாளரும், ஈரோடு எம். பி. யுமான கே. இ. பிரகாஷ், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளா் வி. சி. சந்திரகுமாா், முன்னாள் எம்எல்ஏ ஏ. ஜி. வெங்கடாசலம், மாவட்ட இளைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ஜெ. திருவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
