Politics · 1 outlet covered this

பெங்களூருவின் 50% கழிவு நீர் காவிரியில் கலக்கிறது: கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஒப்புதல்

How outlets told it

The Hindu Tamil6533h ago

பெங்களூருவின் 50% கழிவு நீர் காவிரியில் கலக்கிறது: கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஒப்புதல்

Read at The Hindu Tamil
பெங்களூருவின் 50% கழிவு நீர் காவிரியில் கலக்கிறது: கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஒப்புதல்
Photo: The Hindu Tamil

பெங்களூர: பெங்​களூரு மாநகரின் 50 சதவீத கழிவு நீர் சுத்​தி​கரிப்பு செய்​யப்​ப​டா​மல், காவிரி, தென்​பெண்ணை ஆகிய ஆறுகளில் கலந்து தமிழகத்​துக்கு செல்​வ​தாக கர்​நாடக சுற்​றுச்​சூழல் துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்டி தெரி​வித்​தார். கர்நாடக மாநிலம் பெங்​களூரு மாநகரின் கழிவு நீர் காவிரி, தென்​பெண்ணை ஆகிய ஆறுகளில் கலப்​ப​தாக, தமிழக அரசு பசுமை தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடர்ந்​து. இந்த வழக்​கு, அடுத்த வாரம் விசா​ரணைக்கு வரவிருக்​கும் நிலை​யில், கர்​நாடக சுற்​றுச்​சூழல் துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்டி பெங்​களூரு வடி​கால் வாரிய அதி​காரி​களு​டன் நேற்று ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்த ஆலோ​சனை கூட்​டத்​துக்​குப் பின்​னர், ராமலிங்க ரெட்டி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெங்​களூரு மாநகரில் உள்ள கால்​வாய்​கள் வாயி​லாக தினசரி 2,825 எம்​எல்டி கழிவு நீர் வெளி​யேறுகிறது. இதில், 1,364.5 எம்​எல்டி கழிவு நீர், 37 சுத்​தி​கரிப்பு மையங்​கள் மூலம் சுத்​தி​கரிக்​கப்​படு​கிறது. பின்​னர், சுத்​தி​கரிக்​கப்​பட்ட நீர் கோலார், சிக்​கப்​பள்​ளாப்​பூர், துமக்​கூரு ஆகிய அண்டை மாவட்​டங்​களின் விவ​சாய தேவை​களுக்கு கொண்டு செல்​லப்​படு​கிறது.