ஒரே நாளில் இரண்டு முறை மாற்றம் கண்ட தங்கம் விலை
Read at DinamalarBusiness · 1 outlet covered this
ஒரே நாளில் இரண்டு முறை மாற்றம் கண்ட தங்கம் விலை
How outlets told it

UPDATED : செப் 11, 2026 04:11 PM ADDED : செப் 11, 2026 09:43 AM UPDATED : செப் 11, 2026 04:11 PM ADDED : செப் 11, 2026 09:43 AM அ நிறம் | அளவுசென்னை: சென்னையில் இன்று (செப் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1920 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,120 உயர்ந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராம் 14,155 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 9) ஆபரண தங்கம் கிராம் 14 ஆயிரத்து 145 ரூபாய்க்கும், சவரன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்றைய நிலவரம் நேற்று (செப் 10), தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 14 ஆயிரத்து 255 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, 1 லட்சத்து 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இன்றைய நிலவரம் இந்நிலையில் இன்று (செப் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1920 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 240 ரூபாய் குறைந்து 14,015 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஆனால், மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 14,155 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 250 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.