CM விஜயை விமர்சித்து பேசினாரா விஜய் சேதுபதி? 'தலைவனுக்கான பண்பில்லை..' வைரலாகும் வீடியோ!
Read at Puthiya ThalaimuraiCinema and entertainment · 1 outlet covered this
CM விஜயை விமர்சித்து பேசினாரா விஜய் சேதுபதி? 'தலைவனுக்கான பண்பில்லை..' வைரலாகும் வீடியோ!
How outlets told it
பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம், வாக்குறுதி, பொறுப்பு குறித்து கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கி மிகப்பெரிய ஹிட்டடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார். அந்தவகையில் சமீபத்தில் தொடங்கியிருக்கும் 10வது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கிவருகிறார்.
இந்நிலையில் கடைசி பிக்பாஸ் எபிசோடில் கண்டஸ்டண்ட் ஒருவருக்கு அறிவுரை வழங்குவது போல் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, தமிழக அரசியலை சுட்டிக்காட்டுவது போல் ‘வாக்குறுதிகள், லீடர், லீடர்ஷிப்புக்கான தகுதி’ என சில விசயங்களை பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
#VijaySethupathi Directly attack Someone#BiggBoss10Tamil #BiggBossTamil10 #BiggBossTamil #BiggBoss pic.twitter.com/3Pts1Wonfz
— Dinesh Kumar (@DineshKumaaaar) September 12, 2026
இணையத்தில் வலம்வரும் அந்த வீடியோவில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, “தலைவன் என்றால் என்னவென்றே தெரியாமல், தலைமைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்ததுபோல வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது, எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது என்பது தலைவனுக்கான பண்பு இல்லை. அது ஏமாற்று வேலை” என பேசியுள்ளார்.
COAT pota ellarum GOPINATH agira mudiyathu…First go learn how to host…then criticise others#VijaySethupathi #BiggBossTamil10 pic.twitter.com/RP00gd6B7f
— ⭐தளபதி✨ (@SIDDIQ_VIJAY) September 13, 2026
இந்தவீடியோ கிளிப் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், பலர் முதல்வர் விஜயை தான் மறைமுகமாக விமர்சித்து பேசியிருக்கிறார் என கருத்திட்டு பரப்பிவருகின்றனர். இதனால் விரக்தியடைந்த விஜயின் ரசிகர்கள் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
Host #VijaySethupathi’s Speech In #BiggBossTamil10 .
Is this just a Bigg Boss house discussion… or did Vijay Sethupathi indirectly touch upon the current political scenario in Tamil Nadu? .
The way he questioned the captaincy, opposition and the functioning of the…
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) September 12, 2026
