மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் யார் யார் தெரியுமா?
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் யார் யார் தெரியுமா?
How outlets told it

Published on: 12 Sep 2026, 5:53 amதமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த. வெ. க., தி. மு. க., அ. தி. மு. க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது. இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ. தி. மு. க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த. வெ. க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான தி. மு. க. சார்பில் ஐ. பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ். சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ. தி. மு. க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நாளை அறிவிக்க உள்ளது. இடைத்தேர்தல் என்ற போதிலும் கடுமையான போட்டி நிலவுவதால், வெற்றி பெற அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில், தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவரும் முதல் அமைச்சருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:தேர்தல் கண்காணிப்பாளர்கள்:அமைச்சர் என். ஆனந்த்அமைச்சர் செங்கோட்டையன் அமைச்சர் நிர்மல் குமார்தேர்தல் பணிக்குழுமதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஇணைப் பொறுப்பாளர்கள்:அமைச்சர்ராஜ்குமார்அமைச்சர் தென்னரசுஅமைச்சர் வினோத்துணைப் பொறுப்பாளர்கள்:எம். எல். ஏ சரவணமூர்த்தி;எம். எல். ஏ தியாகராஜன் எம். எல். ஏ விஜயராஜ்எம். எல். ஏ காமாட்சிஎம். எல். ஏ பாலாஜி (எ) மணிகண்டன்தாராபுரம்; பொறுப்பாளர்: அமைச்சர் அருண்ராஜ்இணைப் பொறுப்பாளர்கள்:1. அமைச்சர் விஜய் பாலாஜி2. அமைச்சர் விஜயலட்சுமி3. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்துணைப் பொறுப்பாளர்கள்:1.. பாலமுருகன் எம். எல். ஏ. -திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி2. சத்தியபாமா எம். எல். ஏ -திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி3. ராம்குமார் எம். எல். ஏ, -பல்லடம் சட்டமன்றத் தொகுதி4. திலீப் எம். எல். ஏ -நாமக்கல் சட்டமன்றத் தொகுதி5. சத்யா எம். எல். ஏ, -கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள். அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
