'என் முக வடிவமே மாறியது' - தூக்கத்தில் பற்களை நறநறவெனக் கடிப்பது ஏன் ஆபத்தானதாக மாறலாம்?
Read at BBC News Tamil1 outlet covered this
'என் முக வடிவமே மாறியது' - தூக்கத்தில் பற்களை நறநறவெனக் கடிப்பது ஏன் ஆபத்தானதாக மாறலாம்?
How outlets told it

'என் முக வடிவமே மாறியது' - தூக்கத்தில் பற்களை நறநறவெனக் கடிப்பது ஏன் ஆபத்தானதாக மாறலாம்?பட மூலாதாரம், Ellaபடக்குறிப்பு, தொடர்ந்து பற்களைக் கடிக்கும் பழக்கத்தால் தனது மெல்லும் தசைகள் பெரிதாகி, தாடை அகலமாகிவிட்டதாக எல்லா கூறுகிறார் (இடதுபுறம், சிகிச்சைக்கு முன் மற்றும் வலதுபுறம், சிகிச்சைக்குப் பின்)எழுதியவர், ரூத் க்ளெக்பதவி, பிபிசி பிரசுரிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்எல்லா இரவில் தூங்கும்போது பற்களை நறநறவெனக் கடிக்கத் தொடங்கியது எப்போது என்பது அவருக்கு நினைவில் இல்லை. ஆனால், தாங்க முடியாத அளவுக்கு ஏற்பட்ட தாடை வலி, தலைவலி மற்றும் தனது கடைவாய்ப் பற்கள் தேய்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது ஆகியவற்றை அவரால் தெளிவாக நினைவுகூர முடிகிறது."நான் சொல்ல முடியாத வேதனையில் இருந்தேன்" எனக் கூறும் எல்லா, "எனது முக அமைப்பே மாறத் தொடங்கியது, எனது பற்கள் உடைந்துவிடும் அபாயத்தில் இருந்தன. இதற்காக நான் கண்டிப்பாக ஏதேனும் செய்தாக வேண்டும் என்று எனக்குத் தெரிந்துவிட்டது."31 வயதான இந்த பெண்ணிற்கு 'ப்ரூக்ஸிசம்' எனும் பற்களைக் கடிக்கும் நிலை உள்ளது. இந்த பாதிப்பு தொடர்ந்து மற்றும் தீவிரமாக பற்களைக் கடிக்க வைக்கும் ஒரு நிலையாகும். ஆனால், சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட சிகிச்சை, "சந்தேகத்திற்கு இடமின்றி" தனது வாழ்க்கையை மாற்றிவிட்டதாக அவர் கூறுகிறார். பிரிட்டன் முழுவதும் எல்லாவைப் போல லட்சக்கணக்கானோர் பற்களைக் கடிக்கும் ப்ரூக்ஸிசம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். சில ஆய்வுகளின்படி, கிட்டத்தட்ட நான்கில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும், அறிகுறிகள் தோன்றும் வரை பலர் இதைப் பற்றி அறிவதில்லை. பிரிட்டிஷ் பல் மருத்துவக் கழகத்தின் கூற்றுபடி, ப்ரூக்ஸிசம் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதற்கு சில அனுபவப்பூர்வமான சான்றுகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், தொடர்ச்சியாக பல் கடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பல் பிரச்னைகளுடன் தங்களை நாடி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சில பல் மருத்துவர்கள் பிபிசியிடம் கவலை தெரிவித்துள்ளனர்."இது நிச்சயமாக அதிகரித்து வருகிறது. இன்றைய வாழ்க்கை முறையே மிகவும் மன அழுத்தம் நிறைந்ததாக இருப்பதால், இது ஆச்சரியப்படுவதற்கில்லை," என்கிறார் பிரிட்டிஷ் பல் மருத்துவ உறக்கவியல் சங்க தலைவரான டாக்டர் அதிதி தேசாய்.Skip அதிகம் படிக்கப்பட்டது and continue readingஅதிகம் படிக்கப்பட்டதுEnd of அதிகம் படிக்கப்பட்டதுஆய்வுகளின்படி, நம்மில் பலர் மனஅழுத்தம் காரணமாகவே பற்களைக் கடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அன்றாட வாழ்க்கையின் சுமையை ஏன் நமது தாடைகள் சுமக்க வேண்டும்? இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? சில நேரங்களில் இது நன்மையைத் தருவதாகவும் இருக்க முடியுமா?ப்ரூக்ஸிசம் என்பது, பற்களைக் கடித்தல், தேய்த்தல் , தாடையை இறுக்கிப் பிடித்தல் மற்றும் தாடையை முன்னோக்கித் தள்ளுதல் என நான்கு வகையான தாடை அசைவுகளை ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான சொல்லாகும். சிலர் இரவில் பற்களைக் கடிக்கிறார்கள், சிலர் பகல் நேரத்திலும் பற்களைக் கடிக்கிறார்கள். சிலர் இதைச் செய்வதை சிறிதும் உணர்வதில்லை. ஆனால், வேறு சிலர் கடினமான மவுத் கார்டுகளைக்கூட கடித்துத் தேய்த்துவிடும் அளவுக்கு பற்களை நறநறவெனக் கடிப்பதுடன், ஆழ்ந்து தூங்கும் துணையைக்கூட எழுப்பிவிடுவார்கள். இவ்வாறு பற்களைக் கடிப்பவர்களில் நீங்களும் ஒருவரா என்பதை எவ்வாறு கண்டறிவது? உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். பற்கள் தேய்மானம் அடைவது, உடைவது அல்லது தட்டையாவதுகாலையில் தலைவலி அல்லது முகத்தில் வலி ஏற்படுவதுதாடையில் விறைப்புத் தன்மை ஏற்படுவதுதடைபட்ட தூக்கம் மற்றும் பகல் நேர சோர்வுபற்கூச்சம் அதிகரிப்பதுகாதில் தொற்று இல்லாதபோதும் காது வலி அல்லது நெற்றிப் பொட்டுப்பகுதியில் வலி ஏற்படுவதுபட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கிட்டத்தட்ட நான்கில் ஒருவருக்குப் பற்களை கடிக்கும் பழக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அவர்களில் பலருக்கு தாங்கள் பற்களைக் கடிக்கிறோம் என்பதே தெரியாதுபிரிட்டிஷ் ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சை அமைப்பின் கூற்றுப்படி, மனநலச் சிகிச்சையின் போது பற்களைக் கடிக்கும் பிரச்னை குறித்துப் பேசுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், தற்காலத்தில் மக்கள் தங்கள் மனநலப் பாதிப்புகள் எவ்வாறு உடலளவில் வெளிப்படுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது. இது குறித்து உளவியல் சிகிச்சையாளர் ராஹி போபட்,"இளம் வயதினர் பலர், தாங்கள் அறியாமலேயே பற்களைக் கடிப்பதை உணர்ந்ததாகவோ அல்லது மற்றவர்கள் சுட்டிக்காட்டியதாகவோ குறிப்பிடுகின்றனர். பெரும்பாலானோர் தங்கள் வாழ்வில் அதிக மனஅழுத்தம் நிறைந்த ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் இந்தப் பழக்கம் தொடங்கியது அல்லது தீவிரமடைந்தது என்பதை உணர்கிறார்கள்." என்றார்'மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு வழி'வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்வாட்ஸ்ஆப்பில்பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்பின்தொடர கிளிக் செய்யவும்வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவுமன உளைச்சலும் மன அழுத்தமும் நம்மை "சண்டையிடு அல்லது தப்பியோடு" என்ற நிலையில் வைத்திருக்கலாம். அப்போது இதயத் துடிப்பு அதிகரிக்கும், அட்ரினலின் சுரக்கும், உடல் வெளிப்புற அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயாராகும்போது தசைகள் இறுக்கமடையும் என்று ராஹி போபட் கூறுகிறார்."நாம் இரவில் பற்களைக் கடிக்கும்போது, அது நாள் முழுவதும் நாம் உணர்ந்த மனஅழுத்தத்தையும் பதற்றத்தையும் நமது உடல் வெளியேற்றுவதற்கான ஒரு வழியாக அமைகிறது" என போபட் விளக்குகிறார். எல்லாவைப் பொறுத்தவரை, அவர் விழித்திருக்கும்போது சேரும் மனஅழுத்தத்தை வெளியேற்றும் ஒரு வழியாகவே இரவில் தூக்கத்தில் பற்களைக் கடிக்கும் பழக்கம் மாறியது."இது எனது மன அழுத்த அளவுடன் தொடர்புடையது என எனக்குத் தெரியும்" என்கிறார் எல்லா.'' எனக்கு வெளியில் தெரியாத தீவிர பதற்றக் கோளாறு உள்ளது, என்னைச் சந்திப்பவர்கள் யாருக்கும் அது இருப்பதாகத் தோன்றாது.""நான் எப்போதும் பரபரப்பாக இருப்பேன், அதை மறைப்பதற்காகவே அதிகம் வெளியே செல்வேன்."தனது 20-களில், ப்ரூக்ஸிசத்தால் ஏற்பட்ட வலியைத் தான் பொறுத்துக் கொண்டதாக கூறும் அவர், ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னுடைய பற்கள் உடையும் அபாயத்தில் இருப்பதாகப் பல் மருத்துவர் எச்சரித்தபோது, சிகிச்சை பெற முடிவெடுத்தார். பட மூலாதாரம், Ellaபடக்குறிப்பு, பல் மருத்துவர் அவரது தாடைத் தசைகளில் போடோக்ஸ் ஊசி போட்ட பிறகு, தனது தூக்கமும் ஆரோக்கியமும் மேம்பட்டதாக எல்லா கூறுகிறார். பொதுவாக பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (என். எச். எஸ்) மூலம் இந்தச் சிகிச்சை வழங்கப்படுவதில்லை. எனவே, எல்லா தனது பல் மருத்துவரிடம் பணம் செலுத்தி, தாடையைக் கட்டுப்படுத்தும் மாஸீட்டர் தசைகளில் போடோக்ஸ் ஊசி செலுத்திக்கொள்ள முடிவு செய்தார். இந்தச் சிகிச்சை அந்தத் தசைகளைத் தளர்த்தி, முகத்தில் இருந்த இறுக்கத்தைக் குறைத்தது. இதன் பலன் 3 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும்."கடந்த சில மாதங்களாக என்னால் சரியாகத் தூங்க முடிந்தது" என்று அவர் கூறுகிறார். "காலை நேரத்தில் எனக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது, வலியும் குறைந்துள்ளது. எனது முகத்தின் வடிவமும் முன்பு போல் சதுரமாக இல்லை."தனியார் மற்றும் என். எச். எஸ் நோயாளிகள் இருவருக்கும் சிகிச்சையளிக்கும் பல் மருத்துவரான டாக்டர் சைமன் கோவ் கூறுகையில், பற்களைக் கடிப்பதால் நமது பற்களுக்கு ஏற்படும் உடல் ரீதியிலான பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் என்கிறார். தனது நோயாளிகளின் பற்களைப் பரிசோதிக்க அவர் 3டி ஸ்கேனரைப் பயன்படுத்துகிறார், இதன் மூலம் காலப்போக்கில் பற்களில் ஏற்படும் தேய்மானத்தை அவரால் பார்க்க முடிகிறது."பெரும்பாலான நேரங்களில் மக்கள் தாங்கள் பற்களைக் கடிக்கிறோம் என்பதையே உணர்வதில்லை, ஆனால் எங்களால் அதன் பாதிப்புகளைக் காணமுடிகிறது" என அவர் கூறுகிறார். "பற்கள் மிகக் கடுமையாகத் தேய்ந்துவிட்ட நிலையில், அதற்கான சிகிச்சையானது சிக்கலானதாகவும், மிகவும் செலவுமிக்கதாகவும் இருக்கும்."ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்றும், அவை உருவாக பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம், Simon Coveபடக்குறிப்பு, பற்களைக் கடிப்பவர்கள் தங்களது பற்களுக்கு ஏற்படுத்தும் சேதங்களை அல்லது பாதிப்புகளை 3D ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும்வாய்ப் பாதுகாப்பு உறையை அணிவது போன்ற வழிகளில் இதற்கான அறிகுறிகளை மட்டுமே உங்களால் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், பற்களைக் கடிக்கும் பழக்கத்திற்கான மூலக் காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என அதிதி தேசாய் கூறுகிறார்."பெரும்பாலான நேரங்களில், பல் மருத்துவர்கள் இதற்கான காரணம் என்னவென்று ஆராயாமலேயே வாய்ப் பாதுகாப்பு உறைகளை வழங்கிவிடுகிறார்கள்" என்று அவர் கூறுகிறார். தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் போன்ற தீவிரமான, அடிப்படைக் காரணங்களைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம் என்கிறார் அவர். மூச்சுத்திணறல் என்பது சுவாசப் பாதை அடைபடுவதால் ஏற்படுகிறது. எனவே, மீண்டும் சுவாசிக்க முடியும் வகையில் அந்த அடைப்பை அகற்றுவதற்காக நோயாளி பற்களை நறநறவெனக் கடிக்கக்கூடும்."ப்ரக்ஸிசம் சில நேரங்களில் உங்களை உயிருடன் வைத்திருப்பதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்," என்கிறார் இந்தப் பாதிப்பு குறித்து முன்னணி ஆய்வாளரான பேராசிரியர் ஃபிராங்க் லோப்பெசூ. பற்களுக்கு ஏற்படும் பாதிப்பு, தூக்கம் பாதிக்கப்படுதல், தாடை வலி என ப்ரக்ஸிசத்தால் பல பாதிப்புகள் இருந்தாலும், அது எப்போதும் "தீங்கு விளைவிப்பதாக" மட்டும் இருப்பதில்லை என்றும் அவர் விளக்குகிறார்."உமிழ்நீர் சுரப்பதற்கும் ப்ரக்ஸிசம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தாடைத் தசைகளை அசைப்பது முக்கிய உமிழ்நீர்ச் சுரப்பிகளைச் செயல்பட வைக்கிறது. இது வாயைச் சுத்தமாக வைத்திருக்கவும், பற்களைப் பாதுகாக்கவும் உதவுவதுடன், செரிமானத்துக்கும் மிகவும் அவசியமானது," என்கிறார் லோப்பெசூ. மெல்லுதல் அறிவாற்றலுக்கும் உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன."விலங்குகளிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. மனிதர்களிடமும் இதே விளைவைக் காட்டுவதாக எங்களது ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாடைத் தசைகளைச் செயல்படுத்துவதன் மூலம் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறோம்," என்கிறார் அவர். ஆனால், பற்களை நறநறவெனக் கடிப்பது நாள்பட்ட வலியையும் ஏற்படுத்தக்கூடும். இது ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்பற்களைக் கடிக்கும் பழக்கத்திற்கு சிகிச்சை என்ன?பல் மறுசீரமைப்பு சிகிச்சையில் நிபுணரான பல் மருத்துவர் ரியாஸ் யார், கடுமையான ப்ரக்ஸிசத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். பற்கள் தேய்ந்து போதல், வெடிப்பு மற்றும் உடைதல், தொடர்ந்து தோல்வியடையும் பல் சிகிச்சைகள் போன்ற பிரச்னைகளுடன் பலர் அவரை அணுகுகின்றனர். இவர்களில் பலருக்கு நாள்பட்ட தாடை அல்லது முக வலியும், மோசமான தூக்கமும் இருப்பதாகக் கூறுகின்றனர். இவற்றையும் தனித்தனியாக மதிப்பீடு செய்ய வேண்டும்; அனைத்துக்கும் பற்களை நறநறவெனக் கடிப்பதுதான் காரணம் என்று கருதிவிடக் கூடாது என்கிறார் அவர். கடந்த காலங்களில் பற்களை நறநறவெனக் கடிப்பது தாடையில் ஏற்படும் இயந்திரரீதியான பிரச்னையாக மட்டுமே கருதப்பட்டது என்கிறார் யார். ஆனால், இப்போது இது மிகவும் சிக்கலான பாதிப்பு என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. இது "உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் தொடர்புடைய பிரச்னை" என்றும், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தால் இயக்கப்பட்டு, ஒட்டுமொத்த வாழ்க்கை முறையாலும் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்."நோயாளிகளின் தூக்க முறைகள், உணவுமுறை, உடல் எடை, அவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் அளவு, எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்கிறோம். தூக்கக் கோளாறுகளுக்கான அறிகுறிகளையும் பரிசோதிக்கிறோம்."ஒருவர் பற்களை நறநறவெனக் கடிப்பதற்கு பல காரணிகள் பங்களிக்கக்கூடும். எனவே, இந்தப் பாதிப்பைக் கையாள பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை," என்கிறார் அவர். இதைச் சமாளிக்க என்ன செய்யலாம்?வாய்ப்பாதுகாப்பு உறை: இரவில் பற்கள் தேய்மானமடையாமல் பாதுகாக்க இதனை அணியலாம்சுவாசக் கருவிகள்: பற்களை கடிப்பது என்பது, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலுடன் தொடர்புடையதாக இருந்தால், மூச்சுப்பாதையைத் திறந்து வைத்திருக்க உதவும் சிபிஏபி கருவி அல்லது தாடையை முன்னோக்கித் தள்ளும் கருவிபிசியோதெரபி: தாடை மற்றும் முகத் தசைகளுக்கான உடற்பயிற்சிகள்உளவியல் சிகிச்சைகள்: சிபிடி போன்ற உளவியல் பேச்சுக் சிகிச்சைகள்வாழ்க்கைமுறை மாற்றங்கள்: மனஅழுத்தத்தைக் குறைக்கவும் தூக்கத்தை மேம்படுத்தவும் உதவும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் - உடற்பயிற்சி செய்தல், மது அருந்துவதைக் குறைத்தல், புகைப்பிடிப்பதை நிறுத்துதல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல்போடாக்ஸ்: தீவிரமான பாதிப்புகளுக்குத் தசைகளைத் தளர்த்தும் போடாக்ஸ் ஊசி சிகிச்சை ஒரு சிறந்த தேர்வாகும்தசைகளைத் தளர்த்தும் ஊசி சிகிச்சையுடன் சேர்த்து, தனது பதற்றத்தைக் குறைக்கவும், தனக்குள் இருக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் தியானம் செய்து வருவதாக எல்லா கூறுகிறார்."இந்தச் சிகிச்சை எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது," என்று கூறும் எல்லா, "இப்போது நான் அதன் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிக்க விரும்புகிறேன்."- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
