அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை
Read at DinamalarCrime and courts · 1 outlet covered this
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை
How outlets told it

/செய்திகள்/உலகம்/அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலைADDED : செப் 13, 2026 06:59 AM ADDED : செப் 13, 2026 06:59 AM அ நிறம் | அளவுவாஷிங்டன்: கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே 38 வயதான இந்திய வம்சாவளி பெ ண்ணை வாலிபர் ஒருவர் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செ ய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஷாலினி தாக்கூர் 38, இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வயதான வாலிபர் ரோஹித் என்பவர் பல மாதங்களாக பின் தொடர்ந்துள்ளார். கடந்த செப்டம்பர் 8ம் தேதி அன்று சாக்ரமெண்டாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே, அந்த பெண்ணை அந்த வாலிபர் சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தின் போது அங்கு வந்த போலீசாருடன் நடந்த மோதலின்போது ரோஹித் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். விசாரணையில், ரோஹித் இந்தியாவிலிருந்து ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியதும், நீண்ட நாட்களாக ஷாலினி தாக்கூரை பின் தொடர்ந்து சுட்டுக்கொன்றதும் தெரியவந்துள்ளது.