அக்டோபர் 1 முதல் மாறும் வங்கி விதிகள்: இனி இ-ஸ்டேட்மெண்ட்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்... என்னென்ன நன்மைகள் தெரியுமா?
Read at News18 TamilBusiness · 1 outlet covered this
அக்டோபர் 1 முதல் மாறும் வங்கி விதிகள்: இனி இ-ஸ்டேட்மெண்ட்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்... என்னென்ன நன்மைகள் தெரியுமா?
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Salanraj RLast Updated:Sep 12, 2026 7:26 PM ISTபொதுவாக, வங்கிக்குத் தொடர்பில்லாத தனிநபர்களின் சட்டப்பூர்வ வழக்குகளுக்காக, வங்கி அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரும் நடைமுறை இருந்து வருகிறது1/7மாறிவரும் பொருளாதாரத் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, வங்கிச் சட்டங்களில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 1891-ம் ஆண்டு இயற்றப்பட்ட பழமையான 'வங்கிப் பதிவேடுகள் ஆதாரச் சட்டம்' மாற்றம் செய்யப்பட்டு, புதிய திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.2/7கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து, செப்டம்பர் 10-ம் தேதியன்று மத்திய அரசின் அரசிதழில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, புதிய வங்கிப் பதிவேடுகள் சட்டம் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.3/7இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இச்சட்டத்தின்படி, காகித வடிவிலான கணக்குப் புத்தகங்களுக்கு (Passbook) இணையாக, மின்னணு, மெய்நிகர் மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்களில் பராமரிக்கப்படும் வங்கிப் பதிவேடுகளுக்கும் முழுமையான சட்ட அங்கீகாரம் வழங்கப்படுகிறது.4/7விசா விண்ணப்பங்கள், நீதிமன்றத் தேவைகள் மற்றும் பிற அலுவல் சார்ந்த பயன்பாடுகளுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பது வழக்கம். இதற்காக வங்கிக் கிளைகளுக்கு நேரில் சென்று ஆவணங்களை அச்சிட்டு, அதிகாரியின் சான்றொப்பம் மற்றும் முத்திரை பெற வேண்டிய கட்டாயம் இனி இல்லை.5/7இணைய வங்கி அல்லது மொபைல் செயலிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்யும் டிஜிட்டல் ஆவணங்கள், இனி அனைத்து அரசு மற்றும் சட்டப்பூர்வ அலுவலகங்களிலும் அதிகாரபூர்வ ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், டிஜிட்டல் அல்லது மின்னணு கையொப்பங்கள் (E-Signatures) மூலம் வங்கி ஆவணங்களுக்குச் சான்றளிக்கும் நடைமுறை இச்சட்டத்தின் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனால், ஆவணங்கள் சரிபார்க்கப்படும் நேரம் குறைந்து, வங்கிச் சேவைகளையும் கடன்களையும் வாடிக்கையாளர்கள் விரைவாகப் பெற முடியும்.6/7பொதுவாக, வங்கிக்குத் தொடர்பில்லாத தனிநபர்களின் சட்டப்பூர்வ வழக்குகளுக்காக, வங்கி அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரும் நடைமுறை இருந்து வருகிறது. இதனால் அன்றாட வங்கிப் பணிகளும், வாடிக்கையாளர் சேவையும் பாதிக்கப்படுகின்றன. இக்குறையைப் போக்கும் வகையில், புதிய சட்டத்தில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.7/7இதன்படி, தவிர்க்க முடியாத சிறப்பு காரணங்களுக்காக வங்கி அதிகாரிகளை அழைக்க நேர்ந்தால், அதற்கான காரணத்தை நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி அதிகாரிகளின் நேர விரயம் தவிர்க்கப்பட்டு, கிளைகளில் வாடிக்கையாளர் சேவை தடையின்றி நடைபெறும். சுருக்கமாகக் கூறின், காகிதமில்லா வங்கிச் சேவையை நோக்கி நாட்டை நகர்த்துவதோடு, பொதுமக்களின் அலைச்சலையும், நேர விரயத்தையும் இப்புதிய சட்டம் வெகுவாகக் குறைக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
