தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு!
Read at DinamaniBusiness · 1 outlet covered this
தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு!
How outlets told it

தங்கம் விலை காலையில் குறைந்திருந்த நிலையில் மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒருகிராம் ரூ.14,155க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 உயர்ந்து ஒருகிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் சரவனுக்கு 1,920 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
