World · 1 outlet covered this

வேலை இழந்தால் இனி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்? டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கை!

How outlets told it

News18 Tamil653d ago

வேலை இழந்தால் இனி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்? டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கை!

Read at News18 Tamil
வேலை இழந்தால் இனி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்? டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கை!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeவேலை இழந்தால் இனி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்? டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கை!Published by:Nivetha Jnews18-tamilLast Updated:Sep 11, 2026 10:50 AM ISTஇந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால் தற்காலிக விசாவில் வந்தவர்கள் வேலையிழந்தால், அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.1/5அமெரிக்காவின் எச்-1பி மற்றும் பிற தற்காலிக விசாக்களை பெற்று பணிபுரிபவர்கள் வேலை இழந்தால் இனி உடனடினயாக நாட்டை விட்டு வெளியேறும் வகையில் டிரம்ப் அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.2/5வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற வழங்கப்படும் எச்-1பி மற்றும் பிற தற்காலிக வேலைக்கான விசாக்களை பெற்று பணிபுரிபவர்கள் வேலை இழந்தால், தற்போதைய விதிகளின்படி 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.3/52017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 60 நாள் சலுகைக் காலம், விசா பெற்றவர்கள் புதிய வேலையைத் தேடவோ அல்லது தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் நடைமுறைகளைச் செய்து முடிக்கவோ உதவியாக இருந்தது.4/5சட்டப்பூர்வ குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் டிரம்ப் நிர்வாகம், இந்த சலுகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய விதிமுறைகளின் வரைவு அறிக்கை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் பெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.5/5இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால், எச்-1பி மட்டுமின்றி, E-1, E-2, L-1, O-1, TN, H-1B1, E-3 ஆகிய தற்காலிக விசாவில் வந்தவர்கள் வேலையிழந்தால், அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.