1 outlet covered this

ஹிந்திப் பாடலை பாடிய மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்

How outlets told it

Dinamalar6523h ago

ஹிந்திப் பாடலை பாடிய மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்

Read at Dinamalar
ஹிந்திப் பாடலை பாடிய மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்
Photo: Dinamalar

UPDATED : செப் 13, 2026 04:41 PM ADDED : செப் 13, 2026 04:26 PM UPDATED : செப் 13, 2026 04:41 PM ADDED : செப் 13, 2026 04:26 PM அ நிறம் | அளவுபுதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்த மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், கிஷோர் குமாரின் ஹிந்தி பாடல் ஒன்றை பாடி இந்தியர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார். டில்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பங்கேற்றார். மாநாட்டின் இடையே அவர் பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பயணம் தொடர்பாக அன்வர் இப்ராஹிம் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், பியானோ கலைஞர் ஒருவர் இசையமைப்பதை கவனித்த அவர், தொடர்ந்து கிஷோர் குமாரின் பாடலான க்வாப் ஹோ தும் யா கோயி ஹகீக்கத் என்ற பாடலை பாடி பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளார். இந்தப் பாடல் இடம்பெற்ற' டீன் தேவியான்' என்ற அந்த படம் 1965ம் ஆண்டு வெளிவந்தது. எஸ். டி. பர்மன் இசையில், மஜ்ரூஹ் சுல்தான்புரி பாடலை எழுதியிருந்தார். தேவ் ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்கு முன்பும், அவர், கபி குஜி கபி கம் கம் படத்தில் இடம்பெற்ற போலே சூடியான் பாடலை பாடி சமூக ஊடகத்தில் வெளியிட்டு இருந்தார். ராகுல் சந்திப்பு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிறகு இன்று( செப்.,13) அன்வர் இப்ராஹிம் உடன் காங்கிரஸ் எம்பி ராகுல் சந்தித்து பேசினார். அப்போது இந்தியா மலேஷியா உறவு குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்காவும் உடன் இருந்தார். அவர்களுக்காக மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மீது அன்வர் இப்ராஹிம் பெரும் மதிப்பு வைத்து இருந்தார். இந்தியாவின் பொருளாதார உறவுகளை மேம்படுத்தியதாக அவரை பாராட்டி இருந்தார். பிரிக்ஸ் அமைப்பில் மட்டும் அல்லாமல், தென் கிழக்கு ஆசியான் நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாகவும் மலேஷியா உள்ளது.