Business · 1 outlet covered this

பங்குச் சந்தையில் வீழ்ச்சியுடன் வாரம் நிறைவு

How outlets told it

Dinamani652d ago

பங்குச் சந்தையில் வீழ்ச்சியுடன் வாரம் நிறைவு

Read at Dinamani
பங்குச் சந்தையில் வீழ்ச்சியுடன் வாரம் நிறைவு
Photo: Dinamani

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சா்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 3.19 சதவீதம் குறைந்தது, முதலீட்டாளா்களுக்குச் சற்று ஆறுதல் அளித்தாலும், பணவீக்கம் மற்றும் இந்தியாவின் இறக்குமதி செலவில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை நீடிக்கிறது. மேலும், அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் மற்றும் புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்கள், பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. எனினும், ஐ. டி. மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளின் கொள்முதல் அதிகரித்ததால் பெரும் வீழ்ச்சி தவிா்க்கப்பட்டது. சென்செக்ஸ் 121 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் முடிவில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 120.83 புள்ளிகள் (0.16 சதவீதம்) சரிந்து, 74,781.76-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் (1.67 சதவீதம்), ரிலையன்ஸ் (1.33 சதவீதம்), சன் ஃபாா்மா (1.18 சதவீதம்) உள்பட 19 பங்குகள் வீழ்ச்சி கண்டன. அதேநேரம், எச்டிஎஃப்சி வங்கி (2.02 சதவீதம்), டெக் மஹிந்திரா (1.38 சதவீதம்), எச். சி. எல். டெக். (0.85 சதவீதம்) உள்பட 11 பங்குகள் லாபம் ஈட்டின. நிஃப்டி 80 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 79.70 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து, 23,398.10-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 12 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; 37 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன. ஆக்சிஸ் வங்கி பங்கு மட்டும் விலை மாற்றமின்றி நிலைபெற்றது. வாராந்திர அடிப்படையில்...: இந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 1,733.67 புள்ளிகளும் (2.26 சதவீதம்), தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 499.6 புள்ளிகளும் (2 சதவீதம்) சரிவைக் கண்டன. இதன்மூலம், இந்தியப் பங்குச் சந்தை தொடா்ந்து 5-ஆவது வாரமாக சரிவைச் சந்தித்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.