2 outlets covered this

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள்: மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி..!

How outlets told it

Daily Thanthi993d ago

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள்: மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி..!

Read at Daily Thanthi
Dinamani652d ago

செப்.15-இல் அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை

Read at Dinamani
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள்: மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி..!
Photo: Daily Thanthi

சென்னை, பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அண்ணாவின் பிறந்த நாள்அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளான 15.9.2026 செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர். நிர்வாகிகளுக்கு அழைப்புஇந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம். ஜி. ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.