பால் வண்டியில் போதைப் பொருள் கடத்திய இளைஞா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
பால் வண்டியில் போதைப் பொருள் கடத்திய இளைஞா் கைது
How outlets told it

காட்டுமன்னாா்கோவில் அருகே பால் வண்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் பாபு மற்றும் போலீஸாா், காட்டுமன்னாா்கோவில் அருகே மோவூா் வெள்ளை மதகு அருகே சனிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பால் மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 3 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இவற்றை வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடத்தி வந்த திருச்சின்னபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த ஐயப்பனை (38) கைது செய்தனா்.
