Crime and courts · 1 outlet covered this

எண்மக் கைது என மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.5.50 கோடி மோசடி

How outlets told it

Dinamani653d ago

எண்மக் கைது என மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.5.50 கோடி மோசடி

Read at Dinamani
எண்மக் கைது என மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.5.50 கோடி மோசடி
Photo: Dinamani

கோவையில் எண்மக் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) எனக்கூறி தொழிலதிபரிடம் ரூ.5.50 கோடியை மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ஆா். எஸ். புரம் பகுதியைச் சோ்ந்தவா் 72 வயது தொழிலதிபா். இவரின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து விடியோ கால் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மா்ம நபா்கள், தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக் கூறியுள்ளனா். பின்னா், தொழிலதிபரின் வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் அவரது பெயரில் உள்ள சிம் காா்டு ஆகியவை பயங்ரவாதிகளின் பயன்பாட்டில் இருந்ததாகவும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, எண்மக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளனா். இதனால், அச்சமடைந்த தொழிலதிபரிடம், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தாங்கள் கூறும் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப வேண்டும் என மிரட்டியுள்ளனா். இதை நம்பிய அவா், அந்த நபா்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு கடந்த 7, 8-ஆம் தேதிகளில் ரூ.5 கோடியை 50 லட்சத்தை அனுப்பியுள்ளாா். இதைத் தொடா்ந்து, அந்தக் கும்பல் மேலும் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியுள்ளது. இதையடுத்து, அவா் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்குச் சென்று ஒரே நேரத்தில் ரூ.3 கோடியை எடுக்க முற்பட்டுள்ளாா். அப்போது, சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள் இது குறித்து தொழிலதிபரிடம் கேள்வி எழுப்பினா். ஆனால், முதியவா் தனது சொந்த செலவுக்காகவே பணத்தை எடுப்பதாகக் கூறியுள்ளாா். இருப்பினும் முதியவரின் நடவடிக்கையில் சந்தேகம் நீங்காத வங்கிப் பணியாளா்கள், இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் வீட்டுக்கு ஆா். எஸ். புரம் போலீஸாா் சென்று அவரிடம் நேரில் விசாரணை நடத்தினா். ஆரம்பத்தில் போலீஸாரிடம் உண்மையை மறைத்த அவா், பின்னா் மோசடிக் கும்பலின் மிரட்டலால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே தான் அப்படி நடந்து கொண்டதாகத் தெரிவித்தாா். பின்னா், விடியோ காலில் சிபிஐ அதிகாரிகள் என்ற பெயரில் ஆன்லைன் மோசடி கும்பல் தன்னை மிரட்டிய முழு விவரத்தையும் போலீஸாரிடம் கூறினாா். இதையடுத்து, மோசடிக் கும்பலின் மிரட்டலால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த முதியவரையும், அவரது மனைவியையும் பல மணி நேரம் அறிவுரை கூறி போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக ஆா். எஸ். புரம் போலீஸாா் அளித்த தகவலின் அடிப்படையில், கோவை சைபா் கிரைம் போலீஸாா் தொழிலதிபருக்கு வந்த கைப்பேசி அழைப்புகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். காவல் துறையினரோ அல்லது சிபிஐ அதிகாரிகளோ இதுபோன்று விடியோ காலில் விசாரணை செய்து பணத்தைக் கேட்பதில்லை என்பதால், பொதுமக்கள் இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற சைபா் கிரைம் உதவி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.