1 outlet covered this

இந்திய அசைவ உணவு மிகவும் சுவையானது - ராகுல் காந்தி கருத்து

How outlets told it

Daily Thanthi9914h ago

இந்திய அசைவ உணவு மிகவும் சுவையானது - ராகுல் காந்தி கருத்து

Read at Daily Thanthi
இந்திய அசைவ உணவு மிகவும் சுவையானது - ராகுல் காந்தி கருத்து
Photo: Daily Thanthi

புதுடெல்லி,

பிரிக்ஸ் மாநாட்டில் சைவ உணவு பரிமாறப்பட்ட நிலையில், அசைவ உணவு ருசியாக இருக்கும் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் நேற்று முன்தினம் உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார். கோலாகலமாக நடந்த இந்த விருந்தில் அனைத்து உணவுகளும் சைவ உணவாக பரிமாறப்பட்டன.

சர்வதேச தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருந்தில் இடம்பெற்றிருந்த உணவு வகைகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றிருந்தன.

இந்த நிலையில், இந்தியாவில் 80 சதவீதம் பேர் அசைவ உணவு பிரியர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'ஒரு தகவலுக்காக: 80 சதவீத இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள். இந்திய அசைவ உணவு மிகவும் சுவையானது. என் சகோதரியின் சோலே பத்தூரே யும் (பூரி-கொண்டை கடலை குழம்பு) அப்படித்தான்' என குறிப்பிட்டு இருந்தார்.

உலக தலைவர்களுக்கு சைவ உணவு பரிமாறப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.