Business · 1 outlet covered this

கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

How outlets told it

Dinamani653d ago

கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

Read at Dinamani
கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!
Photo: Dinamani

கச்சா எண்ணெய் விலை உயர்வால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் அபாயம் இருப்பதால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்து 108.62 டாலராக உள்ளது. இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று (வியாழன்) வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.52 ஆகச் சரிந்து முடிந்தது. தொடர்ந்து இன்று (செப். 11, வெள்ளிக்கிழமை) ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று வர்த்தக நேர தொடக்கத்தில் 95.70 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு வர்த்தக நேர இடையே 95.79 என வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்றைவிட 27 பைசா சரிந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் ரூபாயின் மதிப்பு இதுவே குறைவாகும். பங்குச்சந்தையை பொருத்தவரை, இந்த வாரத்தின் முதல் 3 நாள்கள் பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்த நிலையில் நேற்று (செப். 10) சற்று உயர்வுடன் முடிந்தன. தொடர்ந்து இன்று (செப். 11) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.