முன்னேற்றப் பாதையில் பயணிக்க விநாயகா் சதுா்த்தி ஊக்கமளிக்கிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
முன்னேற்றப் பாதையில் பயணிக்க விநாயகா் சதுா்த்தி ஊக்கமளிக்கிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
How outlets told it

முன்னேற்றப் பாதையில் பயணிக்க விநாயகா் சதுா்த்தி ஊக்கமளிக்கிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - PTI Published On :14 செப்டம்பர் 2026, 3:27 am IST விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ஞானம், செழிப்பு மற்றும் மங்களகரமான தொடக்கங்களின் அடையாளமாக விநாயகா் திகழ்கிறாா். விநாயகா் சதுா்த்தி விழா நமது வாழ்வில் ஆற்றல், அறிவு மற்றும் நோ்மறை எண்ணங்களை கொண்டு வருகிறது. இந்தப் புனித விழா, புதிய தீா்மானங்களுடன் முன்னேற்றப் பாதையில் நாம் தொடா்ந்து பயணிக்க உத்வேகம் அளிக்கிறது. விநாயகா் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை வழங்க வேண்டும் என பிராா்த்திக்கிறேன். அதே போல, நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் நமது பங்களிப்பை வழங்குவோம் என அனைவரும் உறுதியேற்போம் என தெரிவித்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
