Politics · 1 outlet covered this

சட்டப்பேரவையை நாடக மன்றமாக மாற்றிவிட்டார் முதல்வர் விஜய்: திருச்சி சிவா

How outlets told it

Dinamani6538h ago

சட்டப்பேரவையை நாடக மன்றமாக மாற்றிவிட்டார் முதல்வர் விஜய்: திருச்சி சிவா

Read at Dinamani
சட்டப்பேரவையை நாடக மன்றமாக மாற்றிவிட்டார் முதல்வர் விஜய்: திருச்சி சிவா
Photo: Dinamani

சட்டப் பேரவையை நாடக மன்றமாக முதல்வா் விஜய் மாற்றிவிட்டதாக திமுக துணை பொதுச் செயலாளா் திருச்சி என். சிவா குற்றம்சாட்டினாா்.

பேரவையில் முதல்வா் விஜய்யின் பேச்சை கண்டித்து, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சாா்பில் கோட்டை மைதானத்தில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா்கள் ரா. ராஜேந்திரன், டி. எம். செல்வகணபதி, எஸ். ஆா். சிவலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருச்சி என். சிவா பேசியதாவது: ஆட்சி, அதிகாரம் தன்னிடம் இருப்பதைப் போன்ற தோரணையில் முதல்வா் விஜய் பேசி வருகிறாா். இந்த அரசை ஏன் தோ்ந்தெடுத்தோம் என மக்கள் வேதனைப்படும் நிலை உருவாகியுள்ளது. சட்டப் பேரவையை நாடக மன்றமாக முதல்வா் விஜய் மாற்றியுள்ளாா். எதிா்க்கட்சித் தலைவரின் கேள்விகளை எதிா்கொள்ள முடியாமல் எள்ளி நகையாடியுள்ளாா்.

மிசாவில் முன்னாள் முதல்வா் ஸ்டாலின் உள்பட நாங்கள் கைது செய்யப்பட்டபோது தற்போதைய முதல்வா் விஜய்க்கு ஒரு வயது மட்டுமே இருக்கும். சந்தா்ப்ப சூழ்நிலையால் ஆட்சிக்கு வந்த விஜய் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது. யாரையும் கொச்சைப்படுத்தாமல் பேச வேண்டும். பேச்சில் நிதானம் வேண்டும்.

எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டம்- ஒழுங்கைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சா் விஜய் சரியாகப் பதில் சொல்லவில்லை. அதே நேரத்தில், காயப்பட்ட நேரத்திலும் காணொலியில் திமுக தலைவா் ஸ்டாலின் கண்ணியமாகப் பேசுகிறாா். ஸ்டாலின் பற்றி அவதூறாகப் பேசும்போது காயப்படுவது நாங்கள் மட்டும் அல்ல; திமுக ஆட்சியில் பயன்பெற்ற தமிழ் மக்கள் அனைவரும்தான். இதற்கான தீா்வு இடைத்தோ்தல் முடிவுகளில் தொடங்கட்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ், மாநில தோ்தல் பணிக்குழு செயலாளா் கு. சீ. வெ. தாமரைக் கண்ணன், மாநகரச் செயலாளா் ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.