கள்ளக்காதலனுடன் சேர்த்து கணவனை கொன்ற இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்
Read at Daily ThanthiAccidents · 1 outlet covered this
கள்ளக்காதலனுடன் சேர்த்து கணவனை கொன்ற இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்
How outlets told it

Published on: 12 Sep 2026, 3:06 pm லக்னோ, உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹசனாபாத் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தபாஷம். இவருக்கு திருமணமாகி ரஹிப் என்ற கணவர் இருந்தார். கள்ளக்காதல்இதனிடையே, தபாஷமிற்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஷாரூக் என்ற இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டுக்குமேல் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். இதை அறிந்த ரஹிப் மனைவியை கண்டித்துள்ளார். மேலும், ஷாரூக் உடனான கள்ளத்தொடர்பை துண்டிக்கும்படி தபாஷமிடம் கூறியுள்ளார். இதனால் கணவன் , மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கணவர் கொலைஇந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக ரஹிப் இருந்ததால் அவரை தீர்த்துக்கட்ட தபாஷம் முடிவு செய்துள்ளார். இதையடுத்து கள்ளக்காதலனுடன் சேர்ந்த்து திட்டம் தீட்டிய தபாஷம் கடந்த 8ம் தேதி கணவருக்கு இரவில் தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்துள்ளார். தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட ரஹிப் மயக்கமடைந்த நிலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை நெரித்து தபாஷம் கொலை செய்துள்ளார். கைதுபின்னர் ரஹிப்பின் உடலை கள்ளக்காதலன் ஷாரூக் உடன் சேர்ந்து கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் தபாஷம் வீசியுள்ளார். வனப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பது குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ரஹிப்பை கள்ளக்காதலன் ஷாரூக் உடன் சேர்ந்து தபாஷம் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து தபாஷத்தையும் அவரது கள்ளக்காதலன் ஷாரூக்கையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
