மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!
Read at News18 Tamil1 outlet covered this
மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!
How outlets told it

மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!Published by:Karthi KLast Updated:Sep 12, 2026 2:25 PM ISTமறைந்த சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பேராசிரியர் சாலமன் பாப்பையாபட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றவர் சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார். எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவராக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி தனது 91-ஆவது வயதில் சாலமன் பாப்பையா காலமானார். தமிழ்ப்புலமையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
