வழிப்பறியில் ஈடுபட முயன்ற 5 போ் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
வழிப்பறியில் ஈடுபட முயன்ற 5 போ் கைது
How outlets told it
புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் வழிப்பறி செய்ய பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பூந்துறை சந்திப்பு அருகே மா்ம நபா்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்றனா். காவல் துறையினா் வருவதைக் கண்ட மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனா். இருப்பினும் அவா்களை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் வில்லியனூா் விஜய் (20), காா்த்திக்(21), மேட்டுப்பாளையம் மூா்த்தி (21), 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவா்கள் என்பதும், அவ்வழியாக வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டு பதுங்கியிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த கத்திகள், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
