வீரர்கள் காயத்தை தடுக்க பிசிசிஐ புதிய திட்டம்
Read at Daily ThanthiSports · 1 outlet covered this
வீரர்கள் காயத்தை தடுக்க பிசிசிஐ புதிய திட்டம்
How outlets told it

Published on: 11 Sep 2026, 12:58 pm மும்பை, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமீப காலங்களில் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். அடிக்கடி காயமடைவது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முக்கியமான புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிசிசிஐ தற்போது இந்திய அணிக்கென விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவப் பிரிவு தலைவரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு வருபவர், இந்திய வீரர்களின் உடல்தகுதி, காயங்களைத் தடுப்பது, காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பொறுப்பு வகிப்பார்.
