1 outlet covered this

குஜராத்: விடுதியில் உணவு நஞ்சானதால் 195 சிறுமிகளுக்கு உடல்நலக் குறைவு

How outlets told it

Dinamani652d ago

குஜராத்: விடுதியில் உணவு நஞ்சானதால் 195 சிறுமிகளுக்கு உடல்நலக் குறைவு

Read at Dinamani
குஜராத்: விடுதியில் உணவு நஞ்சானதால் 195 சிறுமிகளுக்கு உடல்நலக் குறைவு
Photo: Dinamani

குஜராத்தில் விடுதியில் உணவு சாப்பிட்ட 195 சிறுமிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது பற்றி.... கோப்புப்படம். Published On :11 செப்டம்பர் 2026, 5:54 pm ISTகுஜராத்தில் விடுதியில் உணவு சாப்பிட்ட 195 சிறுமிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலம், அனந்த் மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகள் வியாழன் இரவு வழக்கம்போல் உணவை சாப்பிட்டுள்ளனர். உணவைச் சாப்பிட்ட பிறகு 195 சிறுமிகளுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி என உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களில் 20 பேர் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உணவு நஞ்சானதால் சிறுமிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து விடுதியிலிருந்து உணவு மற்றும் நீர் மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் விடுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. SummaryAt least 195 girls staying at a hostel in Gujarat's Anand district fell sick due to suspected food poisoning and 20 of them were hospitalised on Friday, an official said adding that all of them were out of danger. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.