1 outlet covered this

தமிழகத்தில் குழந்தைகளுக்கு புதிய வைரஸ் தொற்று: அறிகுறிகள் என்ன..? தப்புவது எப்படி..?

How outlets told it

News18 Tamil654d ago

தமிழகத்தில் குழந்தைகளுக்கு புதிய வைரஸ் தொற்று: அறிகுறிகள் என்ன..? தப்புவது எப்படி..?

Read at News18 Tamil
தமிழகத்தில் குழந்தைகளுக்கு புதிய வைரஸ் தொற்று: அறிகுறிகள் என்ன..? தப்புவது எப்படி..?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeதமிழகத்தில் குழந்தைகளுக்கு புதிய வைரஸ் தொற்று: அறிகுறிகள் என்ன..? தப்புவது எப்படி..?Reported by:Sundaravadivel EPublished by:Muthu KathanLast Updated:Sep 10, 2026 1:26 PM ISTதமிழகத்தில் குழந்தைகளிடையே கை, பாதம், முகத் தொற்று அதிகரித்து வருகிறது. காய்ச்சல், வாய்ப் புண்கள், கை, கால்களில் தடிப்புகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.1/5குழந்தைக்கு திடீரென காய்ச்சல்; சில நாட்களில் சாப்பிடுவதில் ஆர்வம் குறைதல், தொண்டையில் எரிச்சல், வாயிலும் நாக்கிலும் புண்கள். அதன்பின் கை, கால்கள், உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் சிவப்பு தடிப்புகள் அல்லது கொப்பளங்கள் தோன்றுகின்றன. சிலருக்கு அரிப்பும் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாக தென்பட்டால், அது சாதாரண காய்ச்சல் என அலட்சியப்படுத்த வேண்டாம். தமிழகத்தில் குழந்தைகளிடையே கை, பாதம், முகத் தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.2/5பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே இந்தத் தொற்று அதிகம் பாதிக்கிறது. தற்போது தமிழகத்தில் பரவி வரும் தொற்று Coxsackievirus A16 வகையைச் சேர்ந்ததாகவும், பெரும்பாலான குழந்தைகளுக்கு மிதமான பாதிப்பை ஏற்படுத்தி சுமார் ஒரு வாரத்தில் குணமடையும் என்றும் பொது சுகாதாரத் துறை நிபுணர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். இதே குடும்பத்தைச் சேர்ந்த Enterovirus 71 தொற்று ஏற்பட்டால் அரிதாக பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புள்ளது. தலைவலி, பசியின்மை போன்றவையும் அறிகுறிகளாக இருக்கலாம்.3/5இந்த வைரஸ் தொற்று குழந்தைகளிடையே எளிதில் பரவக்கூடியது. சளி, உமிழ்நீர், இருமல் மற்றும் தும்மலின்போது வெளியேறும் நீர்த்துளிகள், கொப்பளங்களில் உள்ள திரவம், மலம் ஆகியவற்றின் மூலம் வைரஸ் பரவலாம். தொற்று படிந்த விளையாட்டுப் பொருட்கள், மேசைகள், கதவுக் கைப்பிடிகள் போன்றவற்றைத் தொட்டு பின்னர் கண், மூக்கு அல்லது வாயைத் தொடுவதாலும் பாதிப்பு ஏற்படலாம். எனவே, பாதிக்கப்பட்ட குழந்தையின் நேரடி மற்றும் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது அவசியம்.4/5வாய்ப்புண்கள் காரணமாக உணவு அல்லது தண்ணீர் அருந்துவதில் சிரமம் ஏற்படலாம். இதனால் நீரிழிப்பு ஏற்படாமல் குழந்தை போதுமான திரவம் எடுத்துக்கொள்கிறதா என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். கடுமையான சோர்வு, தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு, தண்ணீர் குடிக்க முடியாத நிலை போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். காய்ச்சல் நீடித்தாலோ, அறிகுறிகள் குறையாமல் இருந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். பெரும்பாலான குழந்தைகள் 7 முதல் 10 நாட்களில் குணமடைகின்றனர்.5/5தொற்று மற்ற குழந்தைகளுக்குப் பரவாமல் இருக்க, பாதிக்கப்பட்ட குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது முக்கியம். மருத்துவர்கள் ஒரு வாரம் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளும், அவர்களைப் பராமரிப்பவர்களும் சோப்பால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். பொம்மைகள் மற்றும் அடிக்கடி தொடப்படும் பொருட்களைச் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். நோய் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றாலும், அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் சுகாதார நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.