சென்னையில் இருந்து மதுரைக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
Read at The Hindu TamilCivic issues · 1 outlet covered this
சென்னையில் இருந்து மதுரைக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
How outlets told it

சென்னை: மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு 3 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.17-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயிலும், மானாமதுரைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.16-ம் தேதி மாலை 4.10 மணிக்கு சிறப்பு ரயில் (06153) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து செப்.17-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் (06154) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
