3 நாளில் 15 நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சு
Read at Dinamalar1 outlet covered this
3 நாளில் 15 நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சு
How outlets told it

/செய்திகள்/இந்தியா/ 3 நாளில் 15 நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சுADDED : செப் 13, 2026 08:25 PM ADDED : செப் 13, 2026 08:25 PM அ நிறம் | அளவுபுதுடில்லி: டில்லியில் நடந்த பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டுக்கு இடையே, கடந்த 3 நாளில் 15 நாட்டு தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தி உள்ளார். அப்போது, இரு தரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி , தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், மற்றும் பிராந்திய, சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதித்தார். மாறுபட்ட புவிசார் அரசியல் நிலைப்பாடுகளை கொண்ட நாடுகளை ஒன்றிணைக்கும் பிரிக்ஸ் மாநாட்டி இந்தியா தலைமையேற்று நடத்திய நிலையில் இந்த சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. முதல்நாள்( செப்.,11) 01. செப்.,11 அன்று ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பிரதமர் மோடி பேசியிருந்தார். அப்போது எரிசக்தி, பாதுகாப்பு, சிவில் அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பை ஆய்வு செய்ததுடன், ரஷ்யா - உக்ரைன் போர், மேற்கு ஆசியா நிலைமை, கடல்வழி வர்த்தகம், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு ஆகியவற்றின் தாக்கம் குறித்தும் விவாதித்தனர்.02. இதனைத் தொடர்ந்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானையும் பிரதமர் மோடி சந்தித்து, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகளுக்கு இந்தியாவின்ஆதரவை வலியுறுத்தினார். மேற்காசியாவில் அமைதி, மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.03. அதேநாளில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் பிரதமர் மோடி சந்தித்தார். இரண்டாவது நாள் இரண்டாவது நாளில்( செப்.,12) பிரதமர் மோடி சந்தித்த தலைவர்களின் முக்கியத்துவம் வாய்ந்தது சீன அதிபருடனானசந்திப்பு தான்.04. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோி இரு தரப்பு உறவு, எல்லைபிரச்னை, அமைதி மற்றும் நல்லிணக்கம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள், விநியோகச் சங்கிலி உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாக மாறக்கூடாது என வலியுறுத்திய பிரதமர், இரு தரப்பு உறவுகளை கையாள்வதில் பரஸ்பர மரியாதை, உணர்வுப்பூர்வமான அணுகுமுறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டினார்.05. மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடான சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு செமி கண்டக்டர், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், நிதி தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டது.06. எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியுடனான சந்திப்பின் போது இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது மற்றும் ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.07. ஐக்கிய அரபு எமிரேட்சின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். பாதுகாப்பு, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருந்தது. மூன்றாவது நாள் 08. தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடனான பிரதமர் மோடியின் இன்றைய சந்திப்பு முக்கியமானது ஒன்றாகும்,9. எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி10. புருண்டி அதிபர் எவரிஸ்ட் ந்டாயிஷிமேயே11. பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர்12. கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ்13. உகாண்டா துணை அதிபர் ஜெஸ்ஸிகா அலுபோ14. நைஜீரியா துணை அதிபர் காஷிம் ஷெட்டிமா15. வியட்நாம் பிரதமர் லி மென்ஹ் ஹியுங் ஆகிய தலைவர்களையும் பிரதமர் சந்தித்தார்.