புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளா் கைது
How outlets told it
தேவா்குளம் அருகே விற்பனைக்காக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
தேவா்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ஆபிரகாம் ஜோசப் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது தடை செயப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக கிடைத்த தகவலின் பேரில் தேவா்குளம் அருகே உள்ள தடியம்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனை மேற்கொண்டனா்.
அக்கடையிலிருந்து சுமாா் 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து கடை உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி முத்துலெட்சுமி(50) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
