1 outlet covered this

சென்னை மக்களே, 3 நாள் விடுமுறையை கொண்டாட சூப்பர் வாய்ப்பு; தாம்பரத்தில் தொடங்கியது தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்

How outlets told it

Dinamalar653d ago

சென்னை மக்களே, 3 நாள் விடுமுறையை கொண்டாட சூப்பர் வாய்ப்பு; தாம்பரத்தில் தொடங்கியது தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்

Read at Dinamalar
சென்னை மக்களே, 3 நாள் விடுமுறையை கொண்டாட சூப்பர் வாய்ப்பு; தாம்பரத்தில் தொடங்கியது தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்
Photo: Dinamalar

/செய்திகள்/தமிழகம்/ சென்னை மக்களே, 3 நாள் விடுமுறையை கொண்டாட சூப்பர் வாய்ப்பு; தாம்பரத்தில் தொடங்கியது தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் UPDATED : செப் 11, 2026 11:11 AM ADDED : செப் 11, 2026 11:05 AM UPDATED : செப் 11, 2026 11:11 AM ADDED : செப் 11, 2026 11:05 AM அ நிறம் | அளவுசென்னை: தாம்பரம் ரயில்வே மைதானத்தில், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன், 'தினமலர்' நாளிதழ், சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும், 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ - 2026' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று முதல் துவங்கியது. வரும் செப் 14ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மக்களே, 3 நாள் தொடர் விடுமுறையை கொண்டாட சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!'தினமலர் மெகா ஷாப்பிங்' கண்காட்சியை, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் சீ. பாலசந்தர், சத்யா ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குநர் ஜெ. ஜாக்சன் சாமுவேல் ஆகியோர் தொடங்கி வை த்தார். தாம்பரம் ரயில்வே மைதானத்தில், இன்று முதல், 14ம் தேதி வரை, தினமும் காலை 10:30 மணி முதல், இரவு 8:30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில், குளிரூட்டப்பட்ட 250க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன. தமிழக நிறுவனங்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை, ஒரே இடத்தில் பார்வையிட்டு, தேவையானவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஹைடெக் ஷாப்பிங் ஆச்சரியப்படும் வகையில், 'ஹைடெக் ஷாப்பிங்' உலகத்தை கண்முன் கண்டு உணரும் வகையில், அரங்குகள் உங்களை வரவேற்க காத்திருக்கின்றன. இளம்பெண்களுக்கான ரெடிமேட் ஆடைகள், அழகு சாதனம், பேன்ஸி பேக்ஸ், கலைநயமிக்க டிசைனர் ஜுவல்லரி, காலணிகள், குழந்தைகளை மகிழ்விக்க கேம் ஸோனில் பேட்டரி கார், வாட்டர் போட், பலுான் சூட்டிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், லெதர் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரியல் எஸ்டேட், பர்னிச்சர் மற்றும் இன்டீரியர், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம் பெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் கவரும் வகையில் ஒட்டகச் சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு லட்சம் பரிசு கண்காட்சியின் சிறப்பு அம்சமாக, 'ஆர். சி., கார் ரேஸ் சாம்பியன்ஷிப்' போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்பட உள்ளது. குற்றால அருவி குற்றால அருவியில் குளிப்பதை போன்று மகிழ்வை தரும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழலாம். அறுசுவை உணவு கமகமக்கும் உணவுகளுடன் 'புட் கோர்ட்' வரவேற்க காத்திருக்கிறது. மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா, பீட்சா, பர்கர், நண்டு லாலிபால், பிங்கர் பிஷ், பிஷ் பிரை என வகை வகையான உணவுகளை ருசிக்கலாம். அதேபோல், ஸ்டால்களில் போண்டா, பஜ்ஜி, வடை, புட்டு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஐஸ்கிரீம், குல்பி என, ஸ்நாக்ஸ் வகைகளும் கிடைக்கும். பார்க்கிங் வசதி குடும்பத்துடன் வரும் அனைவருக்கும் 'ஷாப்பிங்' வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுக் கூடங்களுடன் பார்க்கிங் வசதியும் உள்ளது. டூ வீலர், கார் பார்க்கிங் வசதி, மருத்துவ உதவி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக, 'சி. சி. டி. வி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நான்கு நாட்கள் நடக்கும் 'மெகா ஷாப்பிங்' திரு விழாவுக்கு, குடும்பத் துடன் வாருங்கள்.