Cinema and entertainment · 1 outlet covered this

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் `மீசைய முறுக்கு 2' படத்தின் டிரெய்லர் அப்டேட்

How outlets told it

Daily Thanthi993d ago

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் `மீசைய முறுக்கு 2' படத்தின் டிரெய்லர் அப்டேட்

Read at Daily Thanthi
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் `மீசைய முறுக்கு 2' படத்தின் டிரெய்லர் அப்டேட்
Photo: Daily Thanthi

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். 'ஆம்பள', 'தனி ஒருவன்', 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம்கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.