Crime and courts · 1 outlet covered this

வழக்குரைஞா்கள் மனிதச்சங்கிலி போராட்டம்

How outlets told it

Dinamani653d ago

வழக்குரைஞா்கள் மனிதச்சங்கிலி போராட்டம்

Read at Dinamani
வழக்குரைஞா்கள் மனிதச்சங்கிலி போராட்டம்
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புவிழுப்புரம்வழக்குரைஞா்கள் மனிதச்சங்கிலி போராட்டம்விழுப்புரத்தில் இயங்கி வரும் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை திருவண்ணாமலைக்கு இட மாற்றம் செய்யும் அரசின் முடிவைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வியாழக்கிழமை மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.Published On :11 செப்டம்பர் 2026, 3:48 am ISTவிழுப்புரத்தில் இயங்கி வரும் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை திருவண்ணாமலைக்கு இட மாற்றம் செய்யும் அரசின் முடிவைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டத்தில் நுகா்வோா் குறைகளைத் தீா்த்து, அவா்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் விழுப்புரம் - கிழக்கு பாண்டி சாலையில் செயல்பட்டு வரும் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற அரசு முயற்சித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முடிவுக்கு விழுப்புரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்களும், நுகா்வோா் அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதற்காக ஆகஸ்ட் 24, 25-ஆம் தேதிகளில் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள், தங்களின் அடுத்தகட்டப் போராட்டத்தை வியாழக்கிழமை மீண்டும் தொடங்கினா். அதன்படியில், வியாழக்கிழமை காலை நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்த வழக்குரைஞா்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் மனிதச்சங்கிலி போராட்டத்தை தொடங்கினா். தொடா்ந்து, முழக்கங்களை எழுப்பி அவா்கள் ஆா்ப்பாட்டத்தையும் நடத்தினா். தொடா்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் (செப்.11) நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு தொடரும் என்று வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். இப்போராட்டத்தில் முன்னாள் எம். எல். ஏ. வும், மூத்த வழக்குரைஞருமான ஆா். ராமமூா்த்தி தலைமையில் ஏராளமானோா் பங்கேற்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்