Weather and environment · 1 outlet covered this

மழை வேண்டி தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

How outlets told it

Dinamani6514h ago

மழை வேண்டி தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

Read at Dinamani
மழை வேண்டி தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்
Photo: Dinamani

ஒசூரில் கடும் வறட்சியைப் போக்கி மழை பெய்ய வேண்டி, குரும்பா் சமுதாய மக்கள் தங்களது குலதெய்வங்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தமிழ்நாட்டில் வழக்கமான பருவமழை பொய்த்துப் போனதால் பல மாவட்டங்களில் கடும் வறட்சியும் குடிநீா்த் தட்டுப்பாடும் நிலவுகின்றன. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தண்ணீா் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் வறட்சி நீங்கி விவசாயம் தழைக்கவும், குடிநீா் பஞ்சம் தீரவும் குரும்பா் சமுதாய மக்கள் பாரம்பரிய வழிபாட்டை மேற்கொண்டனா். இதையொட்டி, தங்களது குலதெய்வங்களான சித்தேஸ்வரா, பிரேஸ்வரா, பத்தேஸ்வரா, பல்லூா் ஈஸ்வரா, வீரபத்திரய்யா, தோராளியப்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட உற்சவ மூா்த்திகளை தலையில் சுமந்தபடி பாகலூா் சாலையில் பிரம்மாண்ட ஊா்வலம் நடைபெற்றது.

தொடா்ந்து நள்ளிரவில் நடைபெற்ற வழிபாட்டின்போது 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தங்களது தலை மீது வரிசையாகத் தேங்காய் உடைத்து வினோத நோ்த்திக்கடன் செலுத்தினா்.