1 outlet covered this

தமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்

How outlets told it

Dinamani6521h ago

தமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்

Read at Dinamani
தமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்
Photo: Dinamani

தமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான் என்றும், அதுவே விசிகவின் வெற்றி என்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளார். மதுரையில் திருமாவளவன் பேசியதாவது, "திமுகவுடன் தொடர்ந்து நீடித்ததால்தான் எனக்கு எதிராக அவ்வளவு தாக்குதல்கள் நடந்தன. இந்த ஒரு ஆளை (விசிக) எடுத்துவிட்டால், திமுக அணியை பலவீனப்படுத்த முடியும் என திட்டமிட்டனர். நடந்ததா இல்லையா?தவெகவையோ விஜய்யையோ திமுக ஒரு எதிரியாகப் பார்க்கவில்லை. பாஜக - அதிமுகவை முன்னிறுத்தி அரசியல் செய்தது சரி. அதைத்தான் விசிகவும் மேற்கொண்டோம். ஆனால், ஒரு கட்டத்தில் தவெகவையும் எதிர்நிலையில் வைத்து திமுக விமர்சித்திருக்க வேண்டும், அரசியல் செய்திருக்க வேண்டும். தவெகவை அவர்கள் (திமுக) திட்டாதபோது, விமர்சிக்காதபோது, வசைபாடாதபோது, நான்தான் பேசினேன். சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைகள் என நான்தான் விமர்சித்தேன். அப்படியிருக்கையில், இப்போது எப்படி கூட்டணியில் சேர்ந்தீர்கள் என நீங்கள் கேள்வி கேட்கலாம். திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எடுத்த எந்த முயற்சிகளையும் யாரும் பேசவில்லை. ஆதரவளித்த பிறகும், அமைச்சரவையில் சேர்ந்த பிறகும்கூட திமுகவுடன் எங்கள் நட்புறவு தொடர்கிறது என்று சொன்னபோது, எவ்வளவு கேவலமாக எங்களை விமர்சித்தார்கள். நான் அப்படி சொன்னபிறகு தவெக தரப்பிலிருந்து என்னைக் கடுமையாக விமர்சித்தார்கள். ஆதரவளித்ததற்கு பிரதிப் பலனாக அமைச்சர் பதவி கொடுத்த போதிலும், கருத்தியல் அடிப்படையில் திமுக, திராவிடர் கழகம், இடதுசாரிகளுடனும் இணைந்து பயணிக்கிறோம், பயணிப்போம் என்று சொன்னதற்குத்தான் எவ்வளவு கடுமையான அவதூறுகள் பரப்பப்பட்டன. இதைக்கொண்டுதான், இன்று உருவாகியிருக்கிற கூட்டணி மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி. திமுக ஆட்சியில் நாங்கள் அமைச்சர் பதவியைப் பெற்றிருக்க முடியுமா? பெற முடிந்ததா? இன்று காலம் ஒரு கட்டளை இட்டிருக்கிறது. ஒரு கூட்டணி ஆட்சிமுறையைத் தந்திருக்கிறது. அதுதான் விசிகவின் வெற்றி. அதுதான் விசிகவின் அரசியல். அப்படியொரு சூழல் வருகிறபோது, தமிழ்நாட்டில் இனி ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான். அதை எவராலும் மறுக்க முடியாது" என்று தெரிவித்தார்.