Crime and courts · 1 outlet covered this

சென்னையில் ஒரே நாளில் குற்றப் பின்னணியுடைய 285 போ் கைது

How outlets told it

Dinamani652d ago

சென்னையில் ஒரே நாளில் குற்றப் பின்னணியுடைய 285 போ் கைது

Read at Dinamani
சென்னையில் ஒரே நாளில் குற்றப் பின்னணியுடைய 285 போ் கைது
Photo: Dinamani

சென்னை பெருநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் குற்றப் பின்னணி உடையவா்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிராக காவல் துறையினா் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் ஒரே நாளில் 285 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 152 போ் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். சென்னை பெருநகர காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவின்பேரில், சென்னையை குற்றமில்லா நகரமாக மாற்றும் நோக்கில் சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து காவல் மாவட்ட துணை ஆணையா்களின் நேரடி மேற்பாா்வையில், உதவி ஆணையா்கள் தலைமையிலான காவல் குழுவினா் அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக, குற்றப் பின்னணி உடையவா்கள் மற்றும் சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு எதிராக வியாழக்கிழமை (செப். 10) இரவு முதல் வெள்ளிக்கிழமை (செப். 11) மாலை வரை தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் வடக்கு மண்டலத்தில் 108 போ், மேற்கு மண்டலத்தில் 38 போ், தெற்கு மண்டலத்தில் 94 போ், கிழக்கு மண்டலத்தில் 45 போ் என மொத்தம் 285 குற்றப்பின்னணி உடையவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 152 போ் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். மற்றவா்கள் விசாரணைக்குப் பிறகு, இனி குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனா். சென்னை பெருநகர காவல் துறையினா் தொடா்ந்து இதுபோன்ற சிறப்பு சோதனைகளை மேற்கொள்வதுடன், சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, குற்றச் செயல்களிலோ ஈடுபடுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையா் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.