குப்பைத்தொட்டியில் கிடைத்த கள்ளநோட்டுகள்? பெண் கைது
Read at Polimer NewsCrime and courts · 1 outlet covered this
குப்பைத்தொட்டியில் கிடைத்த கள்ளநோட்டுகள்? பெண் கைது
How outlets told it

சென்னை அமைந்தகரை பகுதியில் கள்ள நோட்டுகளை வைத்திருந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 42ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கலெக்டர் காலனி பகுதியில் உள்ள ஆவின் பால் பூத்தில் நேற்று காலை அலமேலு என்பவர் 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றபோது சந்தேகமடைந்த பூத் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில் 2 வாரங்களுக்கு முன் கண்ணப்பன் தெரு பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்ததாக அலமேலு தெரிவித்துள்ள நிலையில் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றபட்ட 2 செல்போன்களின் தரவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
